“கேக்கல.. இன்னும் சத்தமா” ரசிகர்களுடன் வைப் பண்ணிய சூர்யகுமார் யாதவ் – வீடியோ!

0
1354

இந்தியா பங்களாதேஷ் போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்களை கரகோஷம் எழுப்ப சொல்லி கோரிக்கை விடுத்த சூரியகுமாரின் வீடியோ பதிவு இணையதளங்களில் பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் மற்றொரு போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. மிக முக்கியமான ஆட்டம் என்பதால், மழையை பொருட்படுத்தாமல் மைதானத்தில் கூட்டம் வழிந்தது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதாலும் பரபரப்பு உச்சத்தில் இருந்தது.

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி கேஎல் ராகுல்(51) மற்றும் விராட் கோலி(64*) ஆகியோரது அரை சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், பவர்-பிளே ஓவரில் இந்திய பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார். வேறும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கினார்.

பங்களாதேஷ் அணி ஏழு ஓவர்களுக்கு 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்து ஆட்டம் தடைபட்டது. இதற்குப் பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 16வது ஓவரில் வங்கதேச அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதனை கட்டுப்படுத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

போட்டியின் 12வது ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அர்ஷதீப் சிங், வெறும் 2 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். அந்த தருணத்தில் ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

அதற்கு முன்பு வரை சோகமாக காணப்பட்ட இந்திய ரசிகர்கள், 12வது ஓவருக்கு பிறகு மிகவும் உற்சாகமாக மாறினர். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக ‘இந்தியா, இந்தியா’ என்று கரகோஷம் எழுப்பும்படி மைதானத்தில் இருந்து ரசிகர்களை கேட்டுக்கொண்டார் சூரியகுமார் யாதவ். இதன் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

வீடியோ: