கேஎல் ராகுல் உள்ளே, சூரியகுமார் வெளியே; பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
359

சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் இல்லை. முதல் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவன் இங்கே துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது.

மூன்று டி20 தொடர்கள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்த பிறகு, இலங்கை அணி ஒருநாள் போட்டிக்கான தொடரில் களமிறங்க உள்ளது. முதல் போட்டி கவுகாத்தியில் நடைபெறவிருக்கிறது.

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி இரட்டை சதம் அடித்த இசான் கிஷானுக்கு இந்தப் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படாது என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ரோகித் சர்மா தெரிவித்தார்.

முதன்மை துவக்க வீரராக சுப்மன் கில் இருக்கிறார் என்பதால் அவருக்கு இடம் கொடுக்கப்படும். மூன்றாவது இடத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி விராட் கோலி விளையாடுவார். நான்காவது இடத்தில் 2022ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் சூர்யகுமார் அல்லது கேஎல் ராகுல் யார் களமிறங்குகிறார்? என சந்தேகம் இருந்தது. சூரியகுமார் யாதவ் இன்னும் ஒருநாள் போட்டிகளுக்கு அனுபவப்படவில்லை. ஆகையால் கேஎல் ராகுல் ஆடுவார். இஷான் கிஷன் இல்லாதபோது மீதமிருக்கும் விக்கெட் கீப்பரும் அவர் மட்டுமே.

ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார். ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இருக்கின்றனர்.

இலங்கை அணியில் சற்று அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். சஹல் விட வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு எடுபடும். அதேநேரம் இந்திய அணிக்கு பேட்டிங் ஆழமும் அதிகரிக்கும் என்பதால் சஹல் விட சுந்தர் பிளேயிங் லெவனில் இருக்கிறார்.

குல்தீப் மற்றும் யுஷ்வேந்திர சகல் இருவருக்கும் பிளேயிங் லெவலில் இடம் இல்லை. அடுத்த மூன்று இடங்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஏனெனில் கௌகாத்தி மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சற்று எடுபடும். அந்த வகையில் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் இடம் பெற்று இருக்கின்றனர்.

கடைசி ஒரு இடத்திற்கு உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷதீப் சிங் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் கூடுதல் பலமாக கருதப்படும் என்பதால் அர்ஷதீப் சிங் லெவனில் இருப்பதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன.

முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சமி முகமது சிராஜ், அர்ஷதீப் சிங்