சூர்யா நம்பர் 4க்கு செட் ஆகல.. கடைசி 18-20 ஓவர்ஸ் கிடைக்கிற மாதிரி இறக்கி விடுங்க.. அப்புறம் பாருங்க ஆட்டத்த – அட்டகாசமான ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்!

0
451

“சூரியகுமார் யாதவை ஒருநாள் போட்டிகளில் இருந்து தூக்கி விடாதீர்கள். அவர் களமிறங்கும் இடத்தை மாற்றி அவரது திறமையை வெளிக்கொண்டுவர பாருங்கள்” என்று ரோகித் சர்மா ராகுல் டிராவிட்டுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ஆகையால் அந்த இடத்திற்கு சூரியகுமார் யாதவ் விளையாட வைக்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகினார். இரண்டிலும் அச்சுபிசகாமல் ஒரே மாதிரியாக மிச்சல் ஸ்டார்க் பந்தில் எல் பி டபிள்யூ ஆகி வெளியேறியதால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

டி20 போட்டிகளில் இருக்கும் அளவிற்கு ஒருநாள் போட்டிகளில் சூரியகுமார் யாதவ் அபாயகரமான வீரர் இல்லை. ஆகையால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இருக்க வேண்டுமா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

“இவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட பிறகே முடிவு செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகள் இதற்கு முன்னர் கொடுக்கப்படவில்லை. ஆகையால் இப்போது அவரை வெளியேற்றுவது சரியாக இருக்காது.” என்று ரோகித் சர்மா பதிலும் கூறினார்.

- Advertisement -

இதற்கிடையில் சூரிய குமாரியாதவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவர் தனது பேட்டியில் கூறியதாவது:

“சூரியகுமார் யாதவிற்கு டி20 போட்டிகளிலும் அப்படிப்பட்ட பந்தை வீசியிருந்தால் அவர் அவுட்டாகி இருப்பார். மிச்சல் ஸ்டார்க் வீசிய அபாரமான பந்து அது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரத்தில் பேக்கப் வீரராகவே சூரிய குமார் அணியில் இருக்கிறார். இன்னும் தொடர்ச்சியானவாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.”

“சூரியகுமார் யாதவ் திறமைக்கு இங்கு சந்தேகமே இல்லை. ஆனால் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர அவர் களமிறங்கும் இடத்தை மாற்ற வேண்டும். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய விருப்பம் கொண்டவர். அவருக்கு நான்காவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுத்துவிட்டு சூரியகுமார் யாதவை ஆறாவது இடத்தில் களமிறக்க வேண்டும். கடைசி 18-20 ஓவர்களில் சூரியகுமார் யாதவ் அபாயகரமான வீரர். ஆகையால் அதற்கேற்றவாறு அவரை பயன்படுத்தினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயரும். உடனடியாக அவரை வெளியேற்றுவது என்பது சரியான தீர்வல்ல.” என்று ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்-இடம் கோரிக்கை விடுத்தார் தினேஷ் கார்த்திக்.