சூர்யகுமார் அபார சதம்.. ஸ்ரேயாஸ் இப்படி அவுட் ஆயிட்டாறே! ஹர்திக் செய்த தவறை மீண்டும் செய்த ஸ்ரேயாஸ்

0
2507

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அசத்தினார். டாஸ் வென்ற கேப்டன் வில்லியம்சன் ,முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரிஷப் பண்ட் 6 ரன்களில் ஆட்டம் இழக்க, இசான் கிஷன் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் சேர்த்தார்.

சூரியகுமார் யாதவும் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். மற்ற வீரர்கள் ரன் சேர்க்க சொதப்பினார். சூரியக்குமார் யாதவ் 32 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் , ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். டி20 உலக கோப்பையில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாடினார். முதல் பந்திலே பௌண்டரி விலாசிய ஸ்ரேயாஸ் மொத்தமாக ஒன்பது பந்துகளை எதிர் கொண்டு 13 ரன்கள் விளாசினார். இதில் ஒரு பவுண்டரையும் ,ஒரு சிக்சரும் அடங்கும்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பேக் புட்டில் ஷாட் ஆட முயன்ற போது அவர் ஹிட் விக்கெட் ஆனார் .இதனால் ஸ்ரேயாஸ் பெரிய ரன் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா எப்படி ஹிட் விக்கெட் ஆனாரோ, அதே போல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தனது அதிரடியை காட்டிய சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும் 11 பவுண்டர்களும் அடங்கும் நடப்பாண்டில் சூரியகுமார் யாவும் விலாசியே இரண்டாவது சதம் இதுவாகும். கடைசி ஓவரில் இந்திய அணி வீரர்கள் சுந்தர் , தீபக் ஹூடா ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க டிம் சவுதி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 191 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது