“சாகலை சாதாரணமா நினைச்சுக்காதீங்க!” – சூரியகுமார் ருசிகர தகவல்!

0
186
Sky

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உடன் மோதி வருகிறது!

இந்த டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டிருந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றி பெற்றது!

- Advertisement -

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான நேற்றைய ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் பெரிதாக எதுவுமே செய்ய முடியவில்லை. நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் தங்களது அணிக்காக 20 ஓவர்கள் விளையாடி 98 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது!

இந்திய பேட்ஸ்மேன்களாலும் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சூழ்நிலையை உணர்ந்து பொறுமை காட்டி இந்திய அணியை கடைசி பந்து மீதம் இருக்கையில் ஹர்திக் பாண்டியா சூரியகுமார் யாதவ் ஜோடி வெல்ல வைத்தது.

இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பிறகு சூரியகுமார் குல்தீப் மற்றும் சாகல் ஆகியோருக்கு இடையே கலகலப்பான ஒரு உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலின் போது பேசிய சூரியகுமார் சாகலை பார்த்து ” கடந்த தொடரில் நீங்கள் எனக்கு வழங்கிய ஆலோசனையின் படி நான் கடுமையாக உழைக்க முயற்சி செய்தேன். நீங்கள் எனக்கு தொடர்ந்து வழிகாட்டி உதவுவீர்கள் என்று நம்புகிறேன். பார்வையாளர்களே இதை யாரும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ; இவர் என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர்” என்று மிக நகைச்சுவையாக கூறினார்!

- Advertisement -

தொடர்ந்து பேசிய சூரியகுமார்
” நானும் ஹர்திக் பாண்டியாவும் இறுதிவரை தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இது இறுதி வரை சூழ்நிலையை அமைதியாக வைத்திருக்க உதவியது. நான் ஒரு ஷாட்டை தவறவிட்ட பொழுதோ, ஹர்திக் ஒரு ஷாட்டை தவறவிட்ட பொழுதோ, ஒரே ஒரு பெரிய ஷாட் கிளிக் ஆகிவிட்டால் வெற்றி நம் பக்கம் என்று நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டோம். எங்களுக்குள் நடந்த இந்த உரையாடல் வெற்றிக்கு மிகவும் உதவியது” என்று தெரிவித்தார்!