“சூர்யா என்கிட்ட ஒரு முறை ஒன்னு சொன்னாரு!” – ரோகித் சர்மா வெளியிட்ட தகவல்!

0
6441
Rohitsharma

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அர இறுதி போட்டியில் நாளை அடிலைடு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது!

இந்தியா அரையிறுதி சுற்றை எட்டி இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக இருப்பவர், டி20 கிரிக்கெட்டில் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்திருக்கும் சூரியகுமார் யாதவ்!

- Advertisement -

ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ள அவர் வித்தியாசமான ஷாட்களால் பந்துவீச்சாளர்களை வதைத்து மூன்று அரை சதங்களை அடித்து 225 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு ஆட்டநாயகன் விருதும் அடக்கம். தற்போது இந்தியா தாண்டி பிற அணிகளின் முன்னாள் வீரர்களும் இவரைப் பற்றிதான் அதிகம் பேசுகிறார்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சூரியகுமார் யாதவ் பற்றி கூறும் பொழுது ” அவருடன் எந்த பெரிய லக்கேஜையும் கொண்டு செல்லாதவர் என்று நினைக்கிறேன். அது சூட்கேஸ் அல்ல. அவரிடம் நிறைய சூட்கேஸ் உண்டு. அவர் ஷாப்பிங் செய்ய விருப்பம் கொண்டவர். நான் சொல்வது அழுத்தம். அவர அதை எப்பொழுதும் எடுத்துச் செல்வதில்லை. நீங்கள் விளையாடும் பொழுது அதை பார்க்கலாம். கடந்த ஒரு வருடமாக அவர் வேறு ஒரு லெவலில் விளையாடும் வருகிறார். நீங்கள் அவருக்கு எந்த இடத்தில் பேட் செய்ய வைத்தாலும் அவர் அதற்கு தயாராக இருப்பார் ” என்று கூறியுள்ளார்.

இதற்கு அடுத்து கூறிய ரோகித் சர்மா
” அவர் பேட்டிகளில் பேசுவதை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. நாங்கள் 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தாலும் 100 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்து இருந்தாலும் அவர் ஒரே மாதிரி தான் விளையாட விரும்புகிறார். அவர் வெளியே சென்று தன்னை வெளிப்படுத்த பெரிதும் விரும்புகிறார். இதுதான் அவருக்கு முக்கியமாக இருக்கின்றது” என்று உள்ளார்…

- Advertisement -

தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா “எங்களிடம் கடந்த ஆண்டு சிறந்த உலகக் கோப்பை செயல்பாடு இல்லை என்றாலும் ஆனால் அந்த இடத்தில் இருந்து இப்போது வரை அவர் என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது, நாங்கள் சொல்வது போல் அவருக்கு வானம்தான் எல்லை. ஆனால் அவர் பேட்டிங்கில் நல்ல முதிர்ச்சியை காட்டியுள்ளார். அவர் மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து அழுத்தத்தை எடுத்துள்ளார். அவரை சுற்றி பேட் செய்யும் பொழுது அழுத்தம் தானாக தெரிகிறது ” என்றவர்..

மேலும் தொடர்ந்து ” அவர் பெரிய மைதானத்தில் விளையாட அதிகம் விரும்புகிறார். அவர் சிறிய மைதானங்களில் விளையாடுவதை வெறுக்கிறார். அவர் என்னிடம் ஒருமுறை கூறியது போல, சிறிய மைதானங்கள் சிறிய எல்லைகள் அவருக்கு பிடிக்காது. அதில் ஃபீல்டர்களுக்கு இடையே இடைவெளியை பார்க்க முடியாது. அவர் பெரிய இடைவெளிகளை பார்க்க விரும்புகிறார். அதில் தான் அவரது பலம் உள்ளது என்று நான் நினைக்கிறேன் ” என்று புகழ்ந்து கூறி முடித்துள்ளார்!