இந்திய ஏபிடி சூரியகுமாரின் அசத்தல் ஹெலிகாப்டர் ஷாட் – வீடியோ இணைப்பு!

0
731
Surya kumar yadav

கிரிக்கெட் நவீனம் அடைய அடைய பந்து வீச்சின் துல்லியம் அதிகரிப்பது போல பேட்டிங்கிலும் பல ஷாட்ஸ்கள் பேட்ஸ்மேன்களால் உருவாக்கப்பட்டு ஆடப்பட்டு வருகிறது. இதில் ஏபி டிவிலியர்ஸ் புதிய பரிணாமத்தை உருவாக்கியவர். பந்து வீச்சின் எந்த வகையாக இருந்தாலும் அதை மைதானத்தின் எல்லா பக்கத்திலும் அடித்து நொறுக்க கூடியவர். இவரின் வருகைக்குப் பிறகு இப்படியான ஆட்ட முறையை உலக கிரிக்கெட் அணிகள் விரும்ப ஆரம்பித்தன. இதனால் இளம் பேட்ஸ்மேன்கள் இப்படியான ஆட்டம் முறைக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றனர்!

இதில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மிக முக்கியமானவர் ஆவார். இவர் ஏபி டிவில்லியர்ஸ் ஐ போலவே மைதானத்தின் எல்லாப் பக்கங்களிலும் பந்தை 360 டிகிரி யில் அடித்து நொறுக்க கூடியவராக இருக்கிறார்!

- Advertisement -

வழக்கமாக பேட்டிங்கில் நம்பர் 4 ஆம் இடத்தில் இவர் தற்போது ஓபனிங்கில் களம் இறங்கி வருகிறார். வழக்கமான துவக்க வீரர் கேஎல் ராகுல் காயமடைந்து இருப்பதால் சூரியகுமார் துவக்க ஆட்டக்காரராக வருகிறார்.

பந்துவீச்சாளர் இடக்கையோ வலக்கையோ அல்லது வேகமோ அதுவெல்லாம் சூரியகுமார் யாதவிற்கு ஒரு பொருட்டே கிடையாது. அதேபோல் அதேபோல் உலகத்தில் எந்த ஒரு ஆடுகளமும் அவரின் அதிரடி பேட்டிங்கை தடுக்க முடியாது. இதுவரை இருபத்தி ஒரு 20 20 இன்னிங்ஸ் ஆடியிருக்கும் சூர்யகுமார் யாதவ் 150 ஸ்ட்ரைக் ரேட் மேல் வைத்து, ஐசிசி 20 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

வருகின்ற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கிற இருபது-20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக சூரியகுமார் எதிர் அணிகளாளும், இந்திய அணி நிர்வாகத்தாலும் பார்க்கப்படுகிறார். இவர் பத்து இருபது போட்டிகளில் மிடில் ஓவர்களில் வித்தியாசமான சாட்சிகளின் மூலம் ரன்களை கொண்டுவருவார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுகிறார்!

- Advertisement -

நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த நான்காவது இருபது-20 போட்டியில் ரோகித் சர்மாவோடு துவக்க வீரராக களமிறங்கிய சூரியகுமார் வழக்கம்போல் தனது வித்தியாசமான ஷாட்ஸ்களால் பிரமாதப் படுத்தினார். இதில் மகேந்திர சிங் தோனி போல ஒரு மினி ஹெலிகாப்டர் ஷாட் ஆடி இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இன்னொரு புறத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அதிரடியில் பிரபலப்படுத்தினார். கடந்த 20 20 உலக கோப்பையில் அதிரடி இன்டன்ட் இல்லாத காரணத்தினாலே முதல் சுற்று ரோடு தோற்று வெளியே வர வேண்டியதாயிருந்தது. இதனால் தற்போது இந்திய அணி தாக்குதல் பாணி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவும் சூரியகுமாரி யாதவும் அதிரடியாய் சித்தர்கள் ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!