பாபர் ஆசமின் உலகச் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் சூர்ய குமார் – ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு

0
214
Surya kumar yadav babar azam

உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஐசிசி அமைப்பு, அணிகள், வீரர்களின் செயல்பாடுகளை வைத்து, அவ்வப்போது தரவரிசையை மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனியே வெளியிட்டு வருகிறது!

இந்த வகையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற அரியணையில் அமர்ந்தவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் இருவர்தான். ஒருவர் ரிக்கி பாண்டிங்; மற்றொருவர் இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெசின் விராட் கோலி!

- Advertisement -

மூன்று வடிவ கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விராட்கோலி தொடர்ச்சியாக 1013 நாட்கள் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற அரியணையில் இருந்திருக்கிறார். இந்தச் சாதனையை சமீபத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் உடைத்திருந்தார்!

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சாதனைக்கு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் இருக்கிறார். தற்போது டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி அறிவித்திருக்கிறது. இதில் பாபர் ஆசம் 818 புள்ளிகளோடு முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளோடு இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். தற்போது பக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு டி20 போட்டிகள் இல்லை. ஆனால் இந்திய அணிக்கு இன்னும் மூன்று நாட்கள் கழிந்தால், இரண்டு டி20 போட்டிகள் ஆகஸ்ட் 6, 7 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இருக்கிறது. இந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் சூர்யகுமார் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டாலே, பாபர் ஆசமின் உலகச் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!

டி20 பேட்ஸ்மேன்களின் ஐசிசி தரவரிசைப் பட்டியல்:

- Advertisement -
  1. பாபர் ஆசம் – பாகிஸ்தான் – 818 புள்ளிகள்
  2. சூர்ய குமார் யாதவ் – இந்தியா – 816 புள்ளிகள்
  3. மொகம்மத் ரிஸ்வான் – பாகிஸ்தான் – 794 புள்ளிகள்
  4. எய்டன் மார்க்ரம் – செளத்ஆப்பிரிக்கா – 788 புள்ளிகள்
  5. டேவிட் மலான் – இங்கிலாந்து – 731 புள்ளிகள்
  6. ஆரோன் பின்ச் – ஆஸ்திரேலியா – 716 புள்ளிகள்
  7. டெவோன் கான்வோ – நியூசிலாந்து – 688 புள்ளிகள்
  8. பதும் நிசாங்க – இலங்கை – 661 புள்ளிகள்
  9. நிக்கோலஸ் பூரன் – வெஸ்ட்இன்டீஸ் – 652 புள்ளிகள்
  10. மார்டின் கப்தில் – நியூசிலாந்து – 643 புள்ளிகள்

மேலும் இந்தப் பட்டியலில் பத்துக்கு மேல் இருபதாம் இடத்திற்குள் இஷான் கிஷான் 14, ரோகித் சர்மா 16, கே.எல்.ராகுல் 20 ஆகிய இடங்களில் தொடர்கிறார்கள். இஷான் கிஷானுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் அவர் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்திருக்க அதிக வாய்ப்பிருந்திருக்கும்!