படுத்து பந்தை விக்கெட் கீப்பர் தலைக்குமேல் பவுண்டரி ஆக்கிய சூர்யகுமார் – வீடியோ இணைப்பு உள்ளே !

0
140
Surya kumar yadav

ஆஸ்திரேலியாவில் துவங்க செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, செளத்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளோடு டி20 தொடர்களை விளையாடிய இந்திய அணி தற்போது வெஸ்ட்இன்டீஸ் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து யு.ஏ.இ-யில் டி20 முறையில் நடத்தப்படும் ஆசியக் கோப்பை மற்றும் உள்நாட்டில் ஆஸ்திரேலியா, செளத்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களிலும் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக விளையாட இருக்கிறது!

டி20 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இந்திய அணி நகர்வதால், தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் போன்ற புது முகங்களுக்கும், ஆர்.அஷ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பேட்டிங் ஆர்டரிலும், பவுலிங் ஸ்பெல்களிலும் பல பரிசோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன!

இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்திருந்ததால், இங்கிலாந்து டி20 தொடரில் ரிஷாப் பண்ட்டையும், தற்போது வெஸ்ட்இன்டீஸ் தொடரில் சூர்யகுமார் யாதவையும் துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்கி பரிசோதித்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்!

வெஸ்ட்இன்டீஸ் அணியுடனான முதல் இரண்டு டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 24, 11 என ரன்கள் எடுக்க, வெளியில் இருந்து அவரை துவக்க வீரராகக் களமிறக்கக் கூடாது; தொடர்ந்து நம்பர் 4ல் களமிறக்க வேண்டுமென்ற விமர்சன குரல்கள் எழுந்தன!

ஆனால் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் 165 ரன் இலக்கை நோக்கி துவக்க வீரராகவே களமிறங்கினார். ஆனால் இந்த முறை அவரது ஆட்டத்தில் பழைய அதிரடி திரும்ப வந்திருந்தது. அவர் பாணியில் பந்தை மைதானத்தில் 360 டிகிரியில் விரட்டி விளாசினார். 44 பந்துகளைச் சந்தித்து எட்டு பவுண்டரி, நான்கு சிக்ஸர்களோடு 76 ரன்கள் குவித்தார். அடித்த எட்டு பவுண்டரிகளில் ஒரு பவுண்டரியை, நேராக பவுன்சராக வந்த பந்தில் ஏறக்குறைய படுத்து, கடைசி நொடியில் இலாவகமாக பேட்டில் தட்டிவிட்டு, விக்கெட் கீப்பரின் தலைக்குமேல் பவுண்டரி ஆக்கி பிரமாதப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதாய் வென்று தொடரில் 2-1 முன்னிலை வகிக்கிறது. சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்!ஆஸ்திரேலியாவில் துவங்க செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் டி20