இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. சூர்யகுமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா? பிளேயிங் லெவன் என்ன?

0
511

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. கடைசியாக இரு அணிகளும் கொல்கத்தாவில் மோதிய போது ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்த நிலையில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தை வென்றால் தொடரை கைப்பற்றி விடும். அதனால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

- Advertisement -

இந்தியாவின் கிழக்கு பகுதியான கொல்கத்தாவில் மாலை 4 மணிக்கு எல்லாம் சூரியன் வெளிச்சம் மறைந்து விடும். இதன் காரணமாக ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி பனிப்பொழிவால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.இதனை கருத்தில் கொண்டு தான் டாஸ்  வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. இன்றைய ஆட்டத்தில் ஆவது டி20 கிரிக்கெட் அபராமாக செயல்பட்டு வரும் சூரிய குமார் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவையும் சேர்த்து நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. இந்தியா போன்ற ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சுக்கு தான் சாதகம் அதிகம். ஆனால் இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சாளர் வைத்து தான் விளையாடுகிறது. இதனால் ஏதேனும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது அணியில் சேர்ப்பது சிறப்பான விஷயமாக அமையும்.

முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 17 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆவது அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சதத்தை பதிவு செய்தால் ஹாட்ரிக் சதம் என்ற பெருமையை பெறுவார். கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் மட்டுமே ரன்களை சேர்த்தார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆவது ஹர்திக் பாண்டியா அக்சர்பட்டேல் ஆகியோர் ரன்களை சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

- Advertisement -