எங்க பாய்ஸ் செம்ம ஃபார்மல, இந்தியாவை அப்சட் பண்ணுவோம் – நெதர்லாந்து கேப்டன் சூளுரை!

0
660

இந்தியாவை அப்செட் செய்ய காத்திருக்கிறோம் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்திய அணி பலம் மிக்க அணியை வீழ்த்தி தனது பாதையை தொடங்கி இருப்பதால் இந்தியாவின் மீது கூடுதல் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

- Advertisement -

இரண்டாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் சிட்னி மைதானத்திற்கு அக்டோபர் 25ஆம் தேதி சென்று தங்களது பயிற்சியை துவங்கிவிட்டனர். இரண்டாவது சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

கத்துக்குட்டி அணி என்பதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து கூடுதல் ஆரோக்கியத்துடன் இருக்க வைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஓய்வில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியுடன் விளையாடுவது எப்படி இருக்கிறது? மேலும் இந்திய அணியை வீழ்த்துவதற்கான திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றி தனது சமீபத்திய பேட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேசியுள்ளார்.

- Advertisement -

“இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் உலகில் பலம் பொருந்திய அணிகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் தேர்வாகி இங்கே வந்திருக்கிறோம். அதுவும் சிட்னி போன்ற வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் விளையாடுவது பெருமிதமாக இருக்கிறது.

எங்களது வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். எவரும் எங்களை குறைத்து எடை போட்டுவிட வேண்டாம். ஒவ்வொரு வீரரும் தங்களது 100 சதவீதத்தை கொடுத்து இந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். இனியும் அது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய அணிகளை வீழ்த்துவதற்கு இங்கே தயாராக உள்ளோம். எந்த அணியையும் அப்செட் செய்ய எங்களுக்கு தயக்கமில்லை. பயமும் இல்லை.” என்று பேசினார்.

நெதர்லாந்து கேப்டன் பேசியது சூளுரைத்து போல இருந்தது என்று பலரும் பேசியுள்ளனர். மேலும் கத்துக்குட்டி அணியாக எவரையும் நினைக்கவில்லை என்று முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியதும் குறிப்பிடத்தக்கது.