சூரிய குமாருக்கு எப்படி மூன்று சதங்கள் கிடைத்தது? – பாகிஸ்தான் வீரர் பிரமிப்பான பேச்சு!

0
2277
Sky

இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட் அளவில் இன்று அதிகம் பேசப்படும் ஒரு வீரராக இந்தியாவின் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். அவரது தனித்துவம் மிக்க அதிரடி பேட்டிங் அவரை உலக அளவில் கவனித்துப் பேசக்கூடிய வீரராக மாற்றி இருக்கிறது!

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அனைவரும் பிரம்மிக்கத்தக்க வகையில் கொண்டு வந்து அசத்தினார் சூரியகுமார்!

- Advertisement -

கடந்த ஆண்டின் இறுதியில் சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தனது தனித்துவம் மிக்க அதிரடியால் தனது டி20 இரண்டாவது சதத்தை கண்ட அனைவரும் வாயடைத்துப் போகும்படி அடித்துக் காட்டினார்!

சில வாரங்களுக்குள்ளாகவே அடுத்து நேற்று இந்தியாவில் இலங்கைக்கு எதிரான தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் தனது டி20 மூன்றாவது சதத்தை வழக்கம்போல் கொண்டு வந்து, இந்திய டி20 கிரிக்கெட்டிலும் மட்டும் அல்ல உலக டி20 கிரிக்கெட்டில் தான்தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிறுவினார்!

அவரது இந்த சதங்கள் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் மிகவும் வியந்து புகழ்ந்து பேசிப் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் பேட்டிங் பற்றி கூறிய அவர்
” சூரியகுமார் யாதவ் எப்படி மூன்று டி20 சதங்களை அடித்தார்? அவர் தைரியமான அணுகுமுறையை கொண்டவர் மேலும் அவருக்கு ரண்களை எப்படி அடிப்பது என்று நன்றாகவே தெரியும். அவர் பவர் ஹிட்டிங்கில் வலிமையானவர். முக்கியமாக அழுத்தத்தின் கீழ் மிகச் சிறப்பாக செயல்படும் மனவலிமை கொண்டவர் ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“அவர் தனது திறமையை நம்புகிறார். அதனால்தான் அவர் மூன்று சர்வதேச டி20 சதங்களை பெற்றிருக்கிறார். டி20 கிரிக்கெட் விளையாடும் இளையவர்கள் இவரது இந்த ஆட்டத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பயம் இல்லாத பொழுது நீங்கள் எந்த ஷாட்டையும் விளையாடலாம். இது மட்டுமல்லாமல் இவரைப்போல் விளையாடக்கூடிய எந்த பேட்ஸ்மேனும் தற்போது கிரிக்கெட் உலகத்தில் கிடையாது. அவர் பேட்டிங் செய்யும் விதம் பிரமிப்பானது. அவர் நிச்சயமாக ஒரு சிறப்பு திறமைசாலி. மேல் வரிசையில் மிகப்பெரிய வீரர்கள் அணியில் இல்லாத பொழுது, ஒரு புதிய அணியுடன் விளையாடுகிறோம் என்று எண்ணாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயமில்லாமல் அவர் விளையாடினார்” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!