மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பும் ரெய்னா? வீடியோவில் தெறிக்கும் பயிற்சி

0
109

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். இதன் பின்னர் ஐபிஎல் தொடரில் 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரெய்னா, பேட்டிங் செய்ய திணறினார்.அதன் பிறகு காயம் ஏற்பட்டதாக கூறி அணியிலிருந்து ரெய்னா நீக்கப்பட்டு மொயின் அலி அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற மெகா எல்லத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்யவில்லை. இதனால் சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என்று ரசிகர்கள் நினைத்தனர்.சுரேஷ் ரெய்னா இல்லாத சிஎஸ்கே அணையை பின் தொடர்வதில்லை என்று அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

சிஎஸ்கே அணியில் ரெய்னா இடம்பெறாததற்கு அவருக்கும் தோனிக்கும் ஏற்பட்டுள்ள விரிசலே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த இங்கிலாந்து தொடரின் போது தோனியும் ரெய்னாவும் மைதானத்தில் சந்தித்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் தோனியின் பிறந்தநாளுக்கு ரெய்னா வாழ்த்து செய்தியும் தெரிவித்து இருந்தார்.இதனால் இருவரும் மீண்டும் பழசை மறந்து நண்பர்களாக மாறிவிட்டனர் என்ற தகவல் வெளியானது .

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா தனது instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது முதல் காதல் என்று உத்தரப்பிரதேச அணியின் ஜெர்சியை குறிப்பிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ரெய்னா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு மேற்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் சுரேஷ் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடிவெடுத்துள்ளதாக கருதப்படுகிறது. அடுத்த மாதம் பிசிசிஐயின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன.

இதில் ரெய்னா பங்கேற்று தனது திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவார் என தெரிகிறது. ஒருவேளை ரெய்னா இதில் சிறப்பாக விளையாடி விட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெய்னாவை மீண்டும் ஏலத்தில் தேர்வு செய்து விடும் என்று கருதப்படுகிறது .மொத்தத்தில் ரெய்னா கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.