இந்த ஆண்டு ப்ளேஆப்ஸ்க்குள் நுழையும் 4 அணிகள் இதுதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

0
2676
Suresh Raina predicting Top 4 Teams Of IPL 2022

நேற்று ஆரம்பித்துள்ள ஐ.பி.எல் 15-வது சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோத, டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஆட்டத்தையும் வென்றது. நடப்பு சாம்பியனை கடந்த ஆண்டின் ரன்னர் டீம் தோற்கடிக்க, சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்து பகிர்வுகளென களைக்கட்டி இருக்கிறது ஐ.பி.எல்!

சென்னை அணியில் தல தோனிக்கு அடுத்து ஒரு வீரர் எப்போதும் நினைவுக்கூரப்படுவார் என்றால் அவர் சுரேஷ் ரெய்னாதான். ஐ.பி.எல்-ல் ஒரு அணிக்கு 11 சீசன்களில் அவரைப் போல பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சகல துறைகளிலும் பங்களிப்பு அளித்த வேறு ஒரு வீரரைக் காட்டுவது கடினம்!

- Advertisement -

சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல்-ல் 205 ஆட்டங்களில் 5,528 ரன்களை 32 ரன்கள் சராசரியில், 136 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். ஆனால் 2020 சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத சுரேஷ் ரெய்னா, 2021 சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 150 ரன்களையே 17 ரன்கள் என்ற சராசரியில் 125 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருந்தார்.

நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை அணி நிச்சயம் சுரேஷ் ரெய்னாவை வாங்குமென்று சென்னை இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏல முடிவில் இரண்டு கோடிக்கு மேல் கையிருப்போடு திரும்பிய சென்னை ரெய்னாவை வாங்கவில்லை. அப்போது சமூக வலைத்தளங்களில் இது பெரிய சர்ச்சையாகி இரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வலைத்தள பக்கத்தில் தங்களின் அதிருப்தியை, எதிர்ப்பை கடுமையாகவே பதிவு செய்தனர்.

சுரேஷ் ரெய்னா 2022 ஐ.பி.எல் 15 வது சீசனில் விளையாட முடியாமல் போனாலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இணைந்து ஐ.பி.எல்-ல் தொடர்போடுதான் இருக்கிறார். இந்த ஆண்டு ப்ளேஆப்ஸ்க்குள் நுழையும் அணிகள் எதுஎதுவாய் இருக்கலாமென்ற கருத்தை சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அந்த அணிகள்;

சென்னை
டெல்லி
பெங்களூர்
லக்னோ