2022 ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர் அடிக்கும் வீரர் யார் ? சுரேஷ் ரெய்னா தேர்வு

0
63
Suresh Raina

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் பெரிய சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களாக, ஐ.பி.என் பழைய அதிரடி வீரர்கள் மகேந்திர சிங் தோனி, பொலார்டு, ரோகித் ஷர்மா, மேக்ஸ்வெல், ஆன்ட்ரூ ரஸல் போன்றவர்கள் இருக்கிறார்கள். புதிய சிக்ஸர் வீரர்களாக டிம் டேவிட், ஓடியன் ஸ்மித், ரோமன் பவெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்றவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐ.பி.எல் சாதனைகளுக்கான காரணங்களில் ஒருவரான, கடந்த ஏலத்தில் விற்கபடாத, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த ஐ.பி.எல் தொடர்களில் மேற்கண்டவர்களில் யார் அதிக சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக இருப்பாரென்று கூறியிருக்கிறார்.

சுரேஷ் ரெய்னாவின் தேர்வில் வந்துள்ள வீரர் 33 வயதான கரீபியன், கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல். பஞ்சாப் அணிக்கு எதிரான கொல்கத்தா அணியின் கடைசி ஆட்டத்தில், வெறும் 30 பந்துகளில் 71 ரன்களை விளாசியிருந்தார். இதில் இரண்டு பவுண்டரி மட்டுமே அடித்த அவர், எட்டு சிக்ஸர்களை நொறுக்கித் தள்ளியிருந்தார்.

தற்போதைய சீசனில் 33 வயதான ஆன்ட்ரூ ரஸலை முதல் வீரராகக் கொல்கத்தா அணி நம்பி தக்க வைத்திருந்தது. கடந்த ஐ.பி.எல்-ல் பெரிய பார்மில் இல்லாத ரஸலை நம்பி தக்க வைத்ததிற்கு, நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாகவே, அவர் ஆட்டத்தை அணுகும் முறை இருக்கிறது. அவரின் மிகப்பெரிய பிரச்சினையே காயம்தான்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்து நொறுக்கி ஆட்டத்தை முடித்த பின், நிகழ்ச்சி தொகுப்பாளர் அடித்த எட்டு சிக்ஸர்களில் எத்தனை பேட்டின் மத்தியில் பட்டது என்று கேட்க, சற்று யோசித்த ரஸல் ஒன்று என்றார்! பேட்டில் சரியாகப்படாத பந்து பவுண்டரியை தாண்டுவதால்தான் சுரேஷ் ரெய்னாவின் தேர்வாக ஆன்ட்ரூ ரஸல் இருக்கிறார் போல!