என்னைப் பொறுத்தவரை டாப் மூன்று கேப்டன்கள் இவர்கள்தான் – சுரேஷ் ரெய்னா வெளியிட்ட லிஸ்ட்

0
608
Suresh Raina Names his Best Captain

இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து இவர் அமைத்த பார்ட்னர்ஷிப்புகள் பல வெற்றிகளை இந்திய அணி பெற்றுத் தந்துள்ளன. மேலும் இவரின் அதிரடி ஆட்டத்தால் கைவிட்டு போன எத்தனையோ ஆட்டங்களை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் ரன் குவிக்கும் இயந்திரமாக பார்க்கப்படும் இவரை மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்கள் அழைப்பது உண்டு. இதுவரை 3 கேப்டன்கள் இன் தலைமையில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா அந்த மூவரில் யார் சிறந்தவர் என்று வரிசைப் படுத்தி உள்ளார். ஒரு பிரபல யூடியூப் சேனல் நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்கும்போது இதை செய்துள்ளார் ரெய்னா.

ரெய்னா பேசும்பொழுது, தோனியுடன் மிக அதிகமான ஆட்டங்கள் தான் ஆடு இருப்பதால் அவருக்கு முதலிடம் என்றும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை டிராவிட்டின் கீழ் ஆரம்பித்து விளையாடியதால் டிராவிட்டுக்கு இரண்டாமிடம் என்றும் ரெய்னா கூறியுள்ளார். மேலும் தற்போதைய இந்திய கேப்டனான விராட் கோலி மிக சிறப்பான பேட்ஸ்மேன் என்றும் அவருடனும் இணைந்து மிக நல்ல பார்ட்னர்ஷிப்புகள் அமைத்துள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளார். சிறந்த கேப்டன் களுக்கான வரிசையில் முதலிடத்தில் தோனியும் அதை தொடர்ந்து டிராவிட் மற்றும் கோலி இருப்பார்கள் என்றும் கூறினார் ரெய்னா.

தோனியுடன் மிகவும் நெருக்கமான வீரர் ரெய்னா. தோனி ஓய்வு அளித்த அதே தினத்தில் தனது ஓய்வையும் அறிவித்தவர் இவர். தற்போது தோனியுடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சொந்த விஷயங்களுக்காக புறக்கணித்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ஆடினார். தான் ஆடிய 7 ஆட்டங்களில் 123 ரன்களை குவித்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடி வந்தார் ரெய்னா.

ஆனால் கேப்டன் தோனியை பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சற்று மந்தமாகவே இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆடி வந்தார். தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகள் அபிரகாம் மைதானங்களில் தொடங்க இருப்பதால் இந்த வித்தியாசமான சூழலில் இந்த இருவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.