டி20 உலக கோப்பையில் இந்தியா மண்ணைக் கவ்வி வெளியேறியதற்கு இதுதான் காரணம் – சுரேஷ் ரெய்னா கருத்து

0
3412
Suresh Raina about T20 Worldcup loss

வரும் ஐபிஎல் தொடர்பான ஏலம் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்களை 10 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். வரும் மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது. நேற்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னாவை யாருமே ஏலம் கேட்கவில்லை. ஏலத்தின் கடைசி நேரத்திலாவது அவரின் பெயர் மறுபடியும் இடம்பெறும் என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் அப்போதும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இதனால் ஐபிஎல் தொடரில் விலைபோகாத வீரராக ஆகியுள்ளார் ரெய்னா. இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய அணியின் சமீபத்திய டி20 உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ரெய்னா தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். ரெய்னா கடந்த 2011 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

டி20 உலகக் கோப்பை குறித்து பேசிய அவர் இந்திய அணியில் பந்துவீச கூடிய பேட்டிங் வீரர்கள் யாரும் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். தான் விளையாடிய காலத்தில் தான், சேவாக், யுவராஜ், யூசுப் போன்ற பல பேட்டையிலிருந்து பந்துவீசும் திறமையுடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ரஞ்சி போட்டிகளில் அவருடைய பயிற்சியாளராக இருந்த வரும் அனைத்து வீரர்களுமே குறைந்தபட்ச பந்து வீச்சை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2021 நடந்த டி20 உலகக் கோப்பை என இரண்டு முக்கிய தொடர்களிலும் அப்படி பந்து பேசக் கூடியவர்கள் யாரும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட அந்த அணியின் மார்க்ரம் ஏழு அல்லது எட்டு வரை ஒவ்வொரு போட்டியிலும் வீசியதையும் அவர் நினைவுபடுத்தினார். இவ்வாறு செய்வதால் கேப்டனுக்கு அழுத்தம் களத்தில் அதிகம் இருக்காது என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும் வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒரு பேட்டிங் வீரர் குறைந்தது 6 முதல் 8 ஓவர் போடுமளவு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். தற்போது இந்திய அணியில் ஸ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் இந்த குறையை போக்குவார்கள் என்றும் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.