“காயம் அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரை தேர்ந்தெடுத்த நிர்வாகம்” !

0
812

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வருகின்ற வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து தொடங்க இருக்கிறது. 74 போட்டிகளை கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன .

இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திலேயே ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். ரிஷப் பண்டு முதல் ஸ்ரேயாஸ் ஐயர் வரை காயம் காரணமாக அணியிலிருந்து விலகி இருப்பது அவர்களது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

சென்னை அணியை சார்ந்த முகேஷ் குமார் மற்றும் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான பிரதீஷ் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் போட்டி தொடரிலிருந்து விலகி இருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரதீஸ் கிருஷ்ணா இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 30 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை வீழ்த்தியது ஐபிஎல் தொடரில் இவரது சிறந்த பந்துவீச்சாகும்

தற்போது இவருக்கான மாற்று வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் தேர்வு செய்துள்ளனர். பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான சந்திப் ஷர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் தேர்வு செய்துள்ளனர். கடந்த சீசன்களில் இவர் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மிகச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் சந்திப் ஷர்மா. இவரை தற்போது பிரதேஷ் கிருஷ்ணாவிற்கு மாற்ற ஆட்டக்காரராக தேர்ந்தெடுத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம். இவர் தற்போது அணியுடன் இணைந்து இருக்கிறார். பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக 104 போட்டிகளில் விளையாடி இருக்கும் சந்திப் சர்மா 114 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.20/4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாகும்.