நேற்று முழுவதும் டேவிட் வார்னர் மைதானத்திற்குள் வராததற்கு இதுதான் காரணம் – சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் விளக்கம்

0
3884
David Warner

எப்படி சென்னை அணி என்றால் தோனி மும்பை அணி என்றால் ரோஹித் ஒன்று ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டதோ அதே போல சன்ரைசர்ஸ் அணி என்றாலே டேவிட் வார்னர் தான். கடந்த ஆண்டுகளில் பலமுறை தனியாளாக நின்று பல போட்டிகளை சமாளித்து வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இவரது தலைமையில்தான் சன்ரைசர்ஸ் அணி தான் வென்ற ஒரே ஒரு கோப்பையையும் வென்றது. சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய எல்லா தொடர்களிலுமே 500 ரன்களுக்கு மேல் குவித்து அசைக்கமுடியாத துவக்க வீரராக வலம் வந்தவர் வார்னர். பல சதங்கள், அரைசதங்கள் என அசத்திய டேவிட் வார்னரை இந்த முறை சன்ரைசர்ஸ் நிர்வாகம் அணியில் இருந்து நீக்கியது.

எதிர்பார்த்த அளவு வார்னரின் பேட்டிங் அமையாததால் முதலில் அவரது கேப்டன்சி பறிக்கப்பட்டது. மற்றொரு அயல்நாட்டு வீரரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அணியின் இருந்தும் வார்னர் நீக்கப்பட்டார். இத்தனைக்கும் பிறகும் சன் ரைசர்ஸ் அணியின் மற்றொரு துவக்க வீரர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த பேர்ஸ்டோ ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில் இருந்து விலகியதால் டேவிட் வார்னருக்கு மறுபடியும் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் சோபிக்க தவறியதால் மீண்டும் அவரை அணியில் இருந்து வெளியேற்றியது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.

நேற்றைய ஆட்டத்தில் வாரங்களுக்கு பதிலாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதே நேரத்தில் வார்னரை நேற்று முழுக்க மைதானத்தில் காணவில்லை. சன்ரைசர்ஸ் அணி ஆட்டத்தை வென்ற பிறகு டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆனாலும் கார்னர் மைதானத்திற்கு ஏன் வரவில்லை என்று கேள்விகள் எழுந்தபோது அதை சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டிரெவொர் பேலிஸ் தீர்த்து வைத்துள்ளார். அவர் பேசிய பொழுது சில வீரர்கள் தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்குள் வருவார்கள். ஆனால் பலமுறை பல இளம் வீரர்கள் ஓட்டலிலேயே இருப்பது வழக்கம். அவர்களுக்கும் மைதானத்திற்குள் ஆட்டம் நடக்கும் போது அனுபவம் எப்படி இருக்கும் என்பதை காட்டுவதற்காக மூன்று முன்னணி வீரர்களை ஓட்டலில் அமர வைத்துவிட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை ஆட்டத்தை காண அழைத்து வந்தோம் என்று கூறினார். வார்னர், கேதார் ஜாதவ், நதீம் ஆகியோர் நேற்று ஓட்டலில் இருந்ததாக அவர் கூறினார்.

இன்னமும் அடுத்த சுற்றுக்கு செல்ல சன்ரைசர்ஸ் அணிக்கு சிறிதளவு வாய்ப்பு இருப்பதால் அணியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் அவர்களுக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.