கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் இடங்களுக்கு ஆபத்து.. கவாஸ்கர் கொடுத்த எச்சரிக்கை

0
437

இந்திய வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலககோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யும் விதமாக இனிவரும் அனைத்து போட்டிகளும் பார்க்கப்படும். தற்போது ரோஹித் சர்மா, ஷிகர் தவான் விராட் கோலி ஆகியோர் கிட்டத்தட்ட தங்களது இடத்தை உறுதி செய்துவிட்டார்கள்.  இதில் ஷிகர் தவான் தன்னுடைய பழைய பார்மை மீட்டாலே அவர் உலகக்கோப்பை செல்வது உறுதி.

- Advertisement -

நடுவரசையில் யார் உலக கோப்பையில் விளையாடுவார் என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது. இனி நடைபெறும் போட்டிகளை வைத்து நடு வரிசையில் யார் விளையாடுவார்கள் என்று முடிவெடுக்கப்படும். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், கடந்த ஒரு ஆண்டாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் நன்றாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதேபோன்று நடுவரிசையில்  ராகுல் அதிரடி காட்டுகிறார். கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதால் அவருக்கு கூடுதல் சாதகம் இருக்கிறது. இந்த இரண்டு வீரர்ளுக்கும் ஒருவர் மீது ஒருவரால் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் ஹர்தித் பாண்டியா இந்திய ஒரு நாள் அணிக்கு திரும்பினால் இரண்டு வீரர்களில் ஏதேனும் ஒரு பேருக்கு இடம் கிடைப்பது கஷ்டம் தான். இதனால் இருவரும் கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா நடப்பாண்டியன் மூன்று ஒரு நாள் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதில் பேட்டிங்கிக் நூறு ரன்களை அடித்துள்ளார். பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதுபோன்று ஸ்ரேயாஸ்  நடப்பாண்டில் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 639 ரன்களை சேர்த்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடங்கும். கே எல் ராகுலை பொறுத்தவரை நடப்பாண்டில் 8 ஒரு நாள் போட்டியில் விளையாடி 229 ரன்கள் அடித்திருக்கிறார்.