ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட வகையில் வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது நல்லது இல்லை என்றும், ரஞ்சி டிராபியில் மட்டுமே விளையாடும் வீரர்களை ஒப்பிடும் பொழுது இது மோசமானது எனவும் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோடியில் சம்பளம் வாங்கிய வீரர்களும் இருக்கிறார்கள். அதே சமயத்தில் பல ஆண்டுகளாக ரஞ்சித் தொடரில் விளையாடி பெரிய அளவில் சம்பாதிக்காத வீரர்களும் இருக்கிறார்கள். இதை முன்வைத்து சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” நாம் மற்ற நாடுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட கூடியவர்களுக்கும் அந்த நாட்டின் டி20 லீக்கில் விளையாட கூடியவர்களுக்கும் பெரிய சம்பள வித்தியாசம் இருக்காது. ஆனால் ஐபிஎல் தொடரை எடுத்துக் கொள்ளும் பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுபவர்களை விட, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுபவர்கள் பெரிதாக சம்பாதிக்கிறார்கள்”
“வட இந்தியாவில் கடுமையான குளிர், சில இடங்களில் வெப்பம் மற்றும் சில இடங்களில் மழை என கடந்த இரண்டு தசாப்தங்களாக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றிருக்கும் பிரியம் பஞ்சால் ஒட்டுமொத்தமாக இதுவரையில் மூன்று கோடி ரூபாய் கூட சம்பாதித்து இருக்க மாட்டார். இதுவே ஐபிஎல் மட்டுமே விளையாடும் அன்கேப்டு வீரர்களை பாருங்கள். அவர்கள் ஒரு சீசனிலேயே கூட மூன்று கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். சிலர் பெரிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு போட்டியில் கூட விளையாடுவதில்லை”
“மார்க்கெட்தான் இதற்கு காரணம் என்கின்ற வாதத்தை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இதெல்லாம் அணிகளின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடப்பதால் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு பெரிய சம்பளம் வாங்கக்கூடிய பலரின் சிலர் மட்டுமே இந்தியாவுக்காகவும் நல்ல முறையில் விளையாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் பலர் தகுதியற்ற கோடிகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : சாய் சுதர்சன் ஒரு சூப்பர் ஸ்டார்.. இத மட்டும் அவருக்கு கொடுங்க மீதிய பாத்துக்குவார் – மைக்கேல் கிளார்க் கருத்து
“பிசிசிஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் அடுத்த உள்நாட்டு சீசன் துவங்குவதற்கு முன்பாக ஒரு முக்கிய முடிவுக்கு வர வேண்டும். அதாவது உள்நாட்டு சீசனில் நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறும் அணியில் இருக்கும் வீரர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் சம்பளத்திற்கு ஒரு ஸ்லாப் முறையை கொண்டு வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.