இந்திய கிரிக்கெட்

பிப்ரவரி 7ஆம் தேதி சாம்சனை பார்க்க முடியாது.. அவர் ஆடுவது திலக் கையில் தான் இருக்கு – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை இனி பார்க்க முடியாது என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய தேர்வு குழு நியாயமான வாய்ப்புகளை கொடுத்தும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சுனில் கவாஸ்கர் நேரடியாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சஞ்சு சாம்சன் பிரச்சனை

தற்போது சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும்பொழுது அவர் முன் கால் சரியான இடத்திற்கு நகராமல் இருப்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சில பந்துகளுக்கு கிரீசுக்கு உள்ளே சென்றும், சில பந்துகளுக்கு அப்படியே நின்றும் விளையாடுகிறார். அவருடைய பேட்டிங் தொழில்நுட்பம் விசித்திரமாக இருக்கிறது.

இது தெளிவாகவே அவர் தன்னம்பிக்கை குறைபாட்டில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. உலகக்கோப்பை தொடரில் எப்பொழுதும் எந்த அணி நிர்வாகமும் ஒரு வீரருக்கு வாய்ப்பை கொடுத்து அவரை தயார்படுத்த நினைக்காது. நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை மட்டுமே கூட்டிச் செல்லும். எனவே சஞ்சு சாம்சன் இனி பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கடினம்.

- Advertisement -

அவர் பயன்படுத்தவில்லை

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “இந்தியத் தேர்வுக்குழு அனைத்து வாய்ப்புகளையும் வெளிப்படையாக சஞ்சு சாம்சனுக்கு கொடுத்தது என்று நான் நினைக்கிறேன். இப்போது திலக் வர்மா உள்ளே வரும்பொழுது இஷான் கிஷான் உடன் இந்திய அணி மிகவும் பலமாக இருக்கும். ஒருவேளை திலக் வர்மா உடல் தகுதி பெறாவிட்டால் மட்டுமே சஞ்சு சாம்சனை பிப்ரவரி 7ஆம் தேதி இந்திய பிளேயிங் லெவனில் பார்க்க முடியும்”

இதையும் படிங்க : இஷான் கிட்ட இருக்க இந்த திறமை யார்கிட்டயும் இல்லை.. நியூசி பவுலர்களை வெறுப்படையை வச்சுட்டாரு – ஸ்ரீகாந்த் பாராட்டு

“நீங்கள் இஷான் கிஷானை எந்த விதத்திலும் நீக்க முடியாது. இப்படி விளையாடி இருக்கும் அவரை நீங்கள் எப்படி வெளியே அனுப்ப முடியும். தற்போது சஞ்சு சாம்சன் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். மேலும் உலகக் கோப்பை தொடரில் சிறந்த வீரர்களை மட்டுமே கூட்டிக்கொண்டு போக முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by