எனக்காக இது இரண்டையும் செய்யுங்க ரோகித்.. கவாஸ்கர் உருக்கமான கோரிக்கை

0
600

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதைப் போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றால் முதல் இடத்திற்கு தகுதி பெரும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றின் அருகில் இந்திய அணி சென்றுவிட்டது.

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து இலங்கை போன்ற அணிகளுக்கு எதிரான டி20 ,ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ரோகித் சர்மாவுக்கு உருக்கமான கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில், சாம்பியன்களுக்கு பரிசு அளிக்கப்படுவதை நாம் பார்க்கும் போது நாமும் அந்த இடத்தில் இருந்து பரிசுகளை வாங்க வேண்டும் என யோசிப்போம். அதற்காக நாம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு நம்முடைய செயல்பாடுகளை களத்தில் மேற்கொள்வோம்.

நம்முடைய தனிப்பட்ட செயல்பாடுகள் முன்னேற்றம் காணும் போது நாம் சரியான திசையில் தான் செல்கிறோம் என தெரிந்து கொள்வோம். இந்திய அணி தற்போது அந்தப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய ஆசை இரண்டே இரண்டு தான். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் மற்றொன்று நடப்பாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும். இதைத் தவிர ஆசிய கோப்பை பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி,   மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதை செய்தாலே எனக்கு போதுமானது என்று கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை போன்று இந்திய மகளிர் அணியும் ஏதேனும் ஐசிசி கோப்பையை வென்று வந்தால் தாம் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். ஒரு காலத்தில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லுமா என்று இந்திய ரசிகர்கள் கனவு காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என ஆறு ஆண்டு இடைவெளியில் மூன்று ஐசிசி கோப்பைகளை தோணி வென்று தந்தார்.

- Advertisement -

ஆனால் அதன் பிறகு தற்போது பத்து ஆண்டுகள் ஆகிறது இன்னும் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை. இந்த குற்றச்சாட்டினால் தான் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவும் ஐசிசி t20 உலக கோப்பை தவறவிட்ட நிலையில், அவர் முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.