3 போட்டியில் மோசம் பண்ணிட்டாரு.. அடுத்த 2 போட்டியில் கேஎல் ராகுல் ஆடனுமா? – சுனில் கவாஸ்கர் கொடுத்த தரமான பேட்டி!

0
2027

முதல் மூன்று போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே எல் ராகுல், அடுத்து இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டுமா என்பதற்கு பதில் அளித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இடம் பெற்றுள்ள குரூப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் நிச்சயம் இரண்டையும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை உறுதி செய்ய முடியும். ஏதேனும் ஒரு தோல்வி பெற்றால் அரையறுதி வாய்ப்பு சிக்கலில் முடிய அனேக வாய்ப்புகள் இருக்கின்றன.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் குறை கூற முடியாத அளவிற்கு இருந்தது. ஆனால் மூன்றாவது போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நடந்தபோது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோதப்பலாக சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர்.

அதிலும் கே எல் ராகுல் இன் பேட்டிங் 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களிலேயே இருந்தது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டுமா? இல்லை வெளியில் அமர்த்தி விட்டு வேறொரு வீரரை களம் இறக்கி விளையாட வைக்க வேண்டுமா? என்ற பல்வேறு கேள்விகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் கே எல் ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில்,

“கே எல் ராகுல் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மனதளவில் தான் பயிற்சி கொடுக்க வேண்டும். தனிப்பட்ட பேட்டிங்கில் எந்த ஒரு குறையும் அவரிடம் தெரியவில்லை. அவரது பேட்டிங்கில் பதட்டம் இருக்கிறது. அந்த பதற்றத்தை போக்குவது மனதளவில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் மட்டுமே.

மூன்று போட்டிகளில் தவறு செய்து விட்டார். ஆனால் இவருக்கு மாற்றாக இந்திய அணியில் வேறு எந்த துவக்க வீரர் இருக்கிறார்? இல்லை என்பதால், இவரை வைத்து மட்டுமே நாம் விளையாட வேண்டும். மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளிலும் இவர் தான் நிச்சயம் விளையாடுவார். ஆகையால் இவரிடம் என்ன குறை இருக்கிறது? அதை எப்படி சரி செய்ய வேண்டும்? என்பதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேஎல் ராகுலின் பதட்டம் குறையும் பட்சத்தில் அவரது பேட்டிங்கில் மிகவும் எளிதாக ரன்கள் வரும். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமையும். விரைவில் அணி நிர்வாகம் இதை கண்டறிந்து சரி செய்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.” என்றார்.