தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? யார் பிளேயிங் லெவனில் ஆடவேண்டும் – கவாஸ்கர் கொடுத்த அட்டகாசமான பதில்!

0
8087

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கு செல்லும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டதிலிருந்து பல்வேறு கருத்துக்களும் விவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதலில் பந்துவீச்சாளர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் வைக்கப்பட்டன. பின்னர் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் அந்த விவாதம் நகர்ந்தது. தற்போது எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

கே எல் ராகுல் துணை கேப்டனாக இருப்பதால் அவர் நிச்சயம் அணியில் இடம் பெறுவார். விவாதம் முற்றிலுமாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. தினேஷ் கார்த்திக், ஐபிஎல் மற்றும் அதற்கு முன்னதாக நடந்த டி20 தொடர்களில் மிகச் சிறப்பாக பினிஷிங் ரோல் விளையாடினார். கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் களமிறங்கி 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்து விளையாடும் அளவிற்கு இவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அதே நேரம் ரிஷப் பண்ட் சில ஆட்டம் சொதப்பலாக விளையாடினாலும் சில போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தரும் அளவிற்கு அதிரடியாக இருக்கிறது.

சில நேரங்களில் பிளேயிங் லெவனில் பந்துவீச்சு பற்றாக்குறை காரணமாக இருவரையில் ஒருவரை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்த குழப்பத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் பிளேயிங் லெவலில் இருக்க வேண்டும். ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட், ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் முன்னுக்கு பின்னே விளையாட வேண்டும். ஹர்திக் பாண்டியா மற்றும் அவருக்கு பின்னே வரும் வீரர்கள் முழுவதுமாக பந்துவீச்சாளர்களாக இருக்க வேண்டும். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை எடுக்கிறேன் என்று ரன் குவிப்பில் கோட்டை விடுகிறோம். இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் ரிஸ்க் எடுப்பதற்கு தயாராக வேண்டும். ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் எப்படி வெல்ல முடியும்?. ஆகையால் ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.”என்று இந்த விவாதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

- Advertisement -

லிமிடெட் ஓவர் போட்டிகளை பொறுத்தவரை இவர் தான் முதன்மையான விக்கெட் கீப்பர் மற்றவர்கள் எல்லாம் வெளியில் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. மைதானத்தின் தேவைக்கு ஏற்ப வீரர்களை முன்னுக்கு பின் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சில போட்டிகளில் இருவரும் விளையாடலாம். ஒரு சில போட்டிகளில் யாரேனும் ஒருவர் மட்டும் விளையாடி கொண்டு மற்றவர்களை வெளியில் அமர்த்தி விடலாம். ஆசிய கோப்பை தொடரில் ஃபினிஷிங் ரோல் செய்வதற்கு யாரும் இல்லை. ஆகையால் இந்திய அணி அதிக ரன்களை குவிக்க முடியாமல் தவித்தது. பிறகு பந்துவீச்சிலும் கோட்டை விட்டது. அந்த தவறை உலகக் கோப்பையில் செய்ய முடியாது. முன்னரே திட்டமிடுங்கள் என்றும் கவாஸ்கர் அறிவுறுத்தினார்.