கிரிக்கெட்

ரோஹித் மற்றும் டிராவிட் இனி இந்த விஷயதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 டி20 தொடர்களை தற்போது கைப்பற்றியுள்ளது. அதேபோல தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை படைத்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளது.

- Advertisement -

இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் வெற்றியை கொண்டாட, இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி நிர்வாகம் ஒரு சில விஷயங்களை கவனித்தாக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2வது டி20 போட்டியில் நடந்த தவறு – சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர்

நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இலங்கை அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் இறுதியில் அதிரடியாக விளையாடியது. நேற்று முதலில் பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆனால் இறுதி 5 ஓவர்களில் அந்த அணி வீரர்களின் அதிரடி காரணமாக 78 ரன்கள் குவித்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது இந்திய ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை சுலபமாக வீழ்த்தி இருந்தாலும், ஒரு சில விஷயங்களை இந்திய நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஹர்ஷால் பட்டேல் கடைசி 2 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார். டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீச கூடிய புவனேஸ்வர் குமார் அவரது கடைசி ஓவரில் 16 ரன்கள் மறுப்பக்கம் ஜஸ்பிரித் பும்ரா அவரது கடைசி ஓவரில் 14 ரன்கள் என விட்டுக் கொடுத்தது அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கவாஸ்கர் கவலையுடன் கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் இதுபோல நடப்பது வழக்கமான விஷயம் என்றாலும் இது தொடர்ந்து நடக்க கூடாது. கடைசி 5 அல்லது 6 ஓவர்களில் எதிரணி வீரர்கள் கூட்டு சேர்ந்து முடிந்தவரை ரன் வேட்டையில் ஈடுபடுவார்கள். அதுதான் இந்தப் போட்டியின் அழகு. நேற்று நடந்ததை இந்த கணக்கில் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் தொடர்ந்து இந்திய அணியில் இதுபோன்ற தவறு நடக்க கூடாது என்று கூறியுள்ளார்.

இந்திய அணியில் முதல் 12 ஓவர்கள் யார் வீசவேண்டும் கடைசி 8 ஓவர்கள் குறிப்பாக ஓவர்களில் யார் பந்து வீசுவது என்கிற முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட வேண்டும். அப்படி டெத் ஓவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணி வீரர்களை முடிந்தவரை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

Published by