கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“கோலிய திடீர்னு ஒருத்தர் வந்து இனி கேப்டன் இல்லனு சொன்னார்.. ஆனா ரோகித்!” – மைக்கேல் வாகன் பரபரப்பு பேச்சு!

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி மட்டுமே இன்னும் எஞ்சி இருக்கிறது. மீதி அனைத்து போட்டிகளும் முடிவடைந்து இருக்கின்றன.

- Advertisement -

மொத்தம் பத்து அணிகள் பங்கு பெற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன.

இந்திய அணிக்கு இது நான்காவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டி ஆகும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இது எட்டாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியாகும். ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் இரண்டாயிரத்தி மூன்றாம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி குறித்தும், இந்த உலகக் கோப்பை குறித்தும் பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “விராட் கோலியின் ஆற்றல் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு அவர் நீண்ட காலம் கேப்டனாக இருந்து வந்தார். திடீரென ஒருவர் கதவைத் தட்டி இனி நீங்கள் கேப்டனாக இருக்க முடியாது என்று அவரை கூறிவிட்டார். ரோகித்தும் அதற்கடுத்து பொறுப்பை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் இந்தியா முதலில் கொஞ்சம் தள்ளாட்டத்தை சந்தித்தது. அவர்களுடைய பீல்டிங் சரியாக அமையவில்லை மேலும் பந்துவீச்சும் சரியாக இல்லை. பிறகு ட்ரிங்க்ஸ் நேரத்தில் ரோகித் சர்மா அணியை ஒருங்கிணைத்து ஏதோ பேசினார். அதற்குப் பிறகு எல்லாம் மாறியது. அவர் என்ன கூறினார் என்று தெரியவில்லை.

இந்த எல்லையைத் தாண்டி விட்டதால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல தகுதியான அணிதான். ஆனால் ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் சிறப்பானதாக இல்லை.

இந்த உலகக் கோப்பை தொடரில் நெருக்கமான பரபரப்பான போட்டிகள் பெரிதாக இல்லை. உண்மையாக ஒரு நான்கு ஐந்து போட்டிகள் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். 48 போட்டிகள் கொண்ட ஒரு நீண்ட தொடரில் இது மிகவும் குறைவு.

மேக்ஸ்வெல்லின் வேகமான இரட்டை சதம், விராட் கோலியின் 50 ஆவது ஒருநாள் கிரிக்கெட் சதம் போன்ற சில சிறப்பான தருணங்களை இந்த உலகக் கோப்பையில் பார்த்திருக்கிறோம். ஆனால் போட்டித் தன்மை கொண்ட நெருங்கிய ஆட்டங்களை இந்த உலகக் கோப்பையில் அதிகம் பார்க்கவில்லை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by