சுப்மன் கில் அசத்தல் சதம் ; இந்திய பேட்ஸ்மேன் அபார ஆட்டம்!

0
219

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஒரு துவக்கத்தை இந்திய அணிக்கு அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக துவங்கிய இவர்கள் பின்னர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கேற்ப ஆடி முதல் விக்கெட் ஜோடியாக 95 ரன்கள் சேர்த்தனர் . சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா கருணரத்தினே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 42 ரன்களில் ஆட்டம் இழந்தார் . இதனை அடுத்து ஆட வந்த விராட் கோலியுடன் இணைந்து தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தை தொடர்ந்தார் கில் .

ஒரு நாள் போட்டிகளில் தனது ஆறாவது அரை சதத்தை கடந்த பின் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பௌண்டரிகள் ஸ்கோர் செய்து ஒரு நாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார் கில் . இதில் 14 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும் .

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இசான் கிசான் 200 ரண்களை அடித்த பிறகு அவரை துவக்க வீரராக களம் இறக்காமல் சுக்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது . இந்நிலையில் தன்மையில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அருமையாக ஆடி சதம் அடித்தார்கள் . எதிரணியினருக்கு எந்த ஒரு வாய்ப்பும் தராமல் இவர் ஆடிய விதம் கிளாஸ் ஆக இருந்தது.

- Advertisement -

தற்போது வரை இந்திய அணி 33 அவர்களின் 224 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது . கில் 115 ரன்கள்டனும் விராட் கோலி 56 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர்.