உனக்கே இப்படினா, எனக்கு நடந்ததை என்ன சொல்றது ? தோனி பேசியதை வெளியிட்ட சுப்மான் கில்

0
583

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தோனி தம்மிடம் பேசியதை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அண்டர் 19 கிரிக்கெட் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுப்மான் கில். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் சுப்மான் கில் இந்திய அணியில் அறிமுகமாகினார். ஆனால் அப்போது சுப்மான் கில், தனது முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சுப்மான் கில், ஒரு கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக தனது இடத்தை உறுதி செய்தார். தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில், இந்திய அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்மான் கில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

அதில் நான் என்னுடைய அறிமுக போட்டியில் நியூசிலாந்தில் விளையாடினேன். அந்த ஆட்டத்தில் 21 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே அடித்து இருந்தேன். இந்திய அணி 15 ரன்கள் அடித்த போது எனது விக்கெட்டை நான் பறிகொடுத்தேன். அந்த ஆட்டத்தில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.அப்போது எனக்கு 19 வயது தான் இருக்கும் .முதல் ஆட்டத்தில் இப்படி சொதப்பி விட்டோமே என்று நான் சோகத்தில் அமர்ந்திருந்தேன்.

- Advertisement -

அப்போது என்னை பார்த்த தோனி என்னிடம் வந்து ஆறுதலாக பேசினார் .அப்போது எனது அறிமுக போட்டியை விட உன்னுடைய அறிமுகப் போட்டி சிறப்பாகவே தான் அமைந்திருக்கிறது, கவலைப்படாதே என்று கூறினார்.அதன் பிறகு தான் நினைவுக்கு வந்தது, தோனி தனது அறிமுக போட்டியில் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆனார். தோனி அப்போது எனக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை பேசினார்.

அதன் பிறகு நான் கவலைப்படவில்லை. நியூசிலாந்தில் விளையாடிய அனுபவம் எனக்கு இருக்கிறது. தற்போது கிடைக்கும் வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என நான் நம்புகிறேன் என்று சுப்மான் கில் கூறினார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தொடக்க வீராக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தாம் அறிமுகமான இடத்தில் சுப்மான் கிக் மீண்டும் விளையாடுகிறார்.