மோசமான ஆடுகளத்தில் முட்டாள் கூட விக்கெட் எடுப்பான்.. இதெல்லாம் சாதனையா? – அஸ்வின் மீது லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நேரடியாக தாக்குதல்!

0
1848
Ashwin

இந்திய கிரிக்கெட்டில் சுழற் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனித்துவமிக்க ஒருவராக இருந்து வருகிறார்.

இவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த இரண்டு வருடமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த இவரை, தற்பொழுது இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 94 டெஸ்ட் போட்டிகளில் 489 விக்கெட்டுகள் மற்றும் 3185 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 115 போட்டிகளில் 155 விக்கெட்டுகளும் 77 ரன்களும் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த மற்றும் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அஸ்வின் குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் குறித்து ட்விட்டரில் அவர் கூறும் பொழுது “இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அஸ்வினுக்காக தயாரிக்கப்படுவதால், இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை விளையாட தடுமாறுகிறார்கள். வெளிநாடுகளில் அஸ்வினின் சாதனையை பாருங்கள்.

எந்த முட்டாளும் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிதைந்த ஆடுகளங்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அஸ்வின் விமான நிலையத்தில் இருந்து நேராக மைதானத்திற்கு சென்று, ஆடுகளத்தில் எந்தெந்த இடத்தை என்ன செய்ய வேண்டும் என்று மைதான ஊழியர்களிடம் பேசியதை நான் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் மட்டும்தான் 378 விக்கெட் எடுத்திருக்கிறார். வேறு யாரும் இல்லாத காரணத்தினால் அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். உடல் தகுதி இல்லாத ஒரு கிரிக்கெட் வீரர். எல்லாவற்றுக்கும் சாக்குப் போக்குகளை கூறக் கூடியவர்!” என்று கூறி இருக்கிறார்!