ஆஸி அணியை இந்த இந்திய பையன் சோதிக்கப் போறான்.. ஸ்மித் எச்சரிக்கையா இருங்க – ஸ்டூவர்ட் பிராட் பேச்சு

0
502
Broad

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை கடந்த ஐந்து முறையாக இந்திய அணி கைவசம் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை பொருத்த வரையில் அவர்கள் ஐசிசி தொடர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, இரு நாடுகளுக்கு இடையே விளையாடும் டெஸ்ட் தொடர்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். டெஸ்ட் தொடர்களில் பெரும் வெற்றி தான் அவர்களுடைய கௌரவம் என்பது அவர்களுடைய நீண்ட பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீண்டும் தன்னுடைய பழைய ஆதிக்க நிலைமைக்கு திரும்பியிருக்கிறது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆசஸ் டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகத்துடன் என மூன்று பெரிய வெற்றிகளை அடுத்தடுத்து சந்தித்து, உச்சத்திற்கு சென்று இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவிற்கு எதிராக தங்களது சொந்த நாட்டில் இரண்டு முறை டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் அதே சமயத்தில் கட்டுப்பாட்டோடு பந்து வீசி, 21 வயதான இளம் வீரர் மயங்க் யாதவ் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இவருக்கு இந்திய கிரிக்கெட்டில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இவர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றால் ஆச்சரியம் இல்லை.

இது குறித்து பேசி இருக்கும் இங்கிலாந்தின் லெஜன்ட் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கூறும் பொழுது ” மயங்க் யாதவுக்கு இயல்பான வேகம் இருக்கிறது. அவர் வேகத்திற்காக தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அவர் எவ்வளவு வேகமாக வீசினாலும் லைன் மற்றும் லென்த்தில் அவரிடம் இருக்கும் கட்டுப்பாடு மிகவும் விதிவிலக்காக இருக்கிறது. அது அவரை தனித்துக் காட்டும் சிறப்பான ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 டி20 உலககோப்பை.. ப்ளீஸ் இந்த 25 வயது ஃபாஸ்ட் பவுலரை கூட்டிட்டு போங்க – இர்பான் பதான் கோரிக்கை

பொதுவாக இளம் பந்துவீச்சாளர்கள் தங்கள் வேகத்தை அதிகப்படுத்தி வீசுவதற்காக முயற்சிகள் செய்து லைன் மற்றும் லென்த்தை தவற விடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் மயங்க் யாதவ் கட்டுப்பாட்டுடன் இருப்பது அற்புதமானது. நான் ஏற்கனவே இவர் குறித்து ஸ்மித்துக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறேன். இவரை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சந்திப்பதாக இருந்தால் இப்பொழுதே பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.