2008 ஐ.பி.எலில் பங்கேற்ற 11 வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த அணி

0
3233
Yusuf Pathan MS Dhoni and Shaun Marsh

கிரிக்கெட்டில் ஒவ்வொரு தொடர் நடந்து முடிந்தவுடன் அந்த தொடரில் விளையாடிய சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து ஒரு அணியாக வெளியிடும் வழக்கம் எப்போதும் இருக்கும். உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய அனைத்து வீரர்கள் மத்தியில், சிறந்த 11 வீரர்களைத் தேர்ந்தெடுத்து “சிறந்த பிளேயிங் Xi” என்கிற பெயரில் ஒரு அணியை நாம் பார்த்திருப்போம்.

தற்பொழுது அதேபோல ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட முதலாம் ஆண்டு, அதாவது 2008 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து விளையாடிய அனைத்து வீரர்களுல், சிறந்த பதினோரு வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

- Advertisement -

ஓபனிங் வீரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் ஷான் மார்ஷ்

2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ் 11 இன்னிங்ஸ்களில் ஐந்து அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என மொத்தமாக 616 ரன்கள் குவித்தார். இவரது அபார ஆட்டத்தினால் பஞ்சாப் அணி மிக எளிதாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பஞ்சாப் அணி சென்னை அணிக்கு எதிராக நடந்த அரையிறுதிப் போட்டியில் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டெல்லி அணிக்காக விளையாடிய கௌதம் கம்பீர் 14 போட்டிகளில் ஐந்து அரை சதங்கள் உட்பட மொத்தமாக 534 ரன்கள் குவித்தார். ஷான் மார்ஷுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்த வீரராகவும் கௌதம் கம்பீர் திகழ்ந்தார். இவருடைய அபாரமான ஆட்டத்தினால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்த டெல்லி அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தது.

மிடில் ஆடர் வரிசையில் ஷேன் வாட்சன் சுரேஷ் ரெய்னா மற்றும் எம்எஸ் தோனி

மிடில் ஆடர் வரிசையில் 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் 15 போட்டிகளில் 4 அரைசதங்கள் உடன் மொத்தமாக 472 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரை கைப்பற்ற ஷேன் வாட்சன் மிகப்பெரிய அளவில் உதவினார். குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் இவர் அரை சதமடித்து அசத்தியதோடு, பந்துவீச்சு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

சென்னை அணிக்கு விளையாடிய சுரேஷ் ரெய்னா அந்தாண்டு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அரை சதங்களுடன் மொத்தமாக 421 ரன்கள் குவித்தார். சென்னை அணியில் ஒரு பக்கம் சுரேஷ் ரெய்னா அசத்த மற்றொரு பக்கம் கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டு அரை சதங்களுடன் மொத்தமாக 414 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு, இவர்கள் இருவரும் முக்கிய காரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் வீரர்களாக பதான் பிரதர்ஸ்

இவர்கள் இருவரில் அண்ணன் இர்பான் பதான் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய இர்பான் பதான் பேட்டிங்கில் 131 ரன்கள், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகள் என தன்னுடைய முழு பங்களிப்பை பஞ்சாப் அணிக்கு அந்தாண்டு வழங்கினார். பஞ்சாப் அணி அரையிறுதி ஆட்டம் வரை முன்னேற இவரது பங்களிப்பு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

மற்றொரு பக்கம் தம்பி யூசப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சக்கைப்போடு போட்டார். பேட்டிங்கில் 15 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்கள் உடன் 435 ரன்கள் குவித்தார். பந்து வீச்சிலும் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி ராஜஸ்தான் அணிக்கு தொடர் முழுவதும் பலம் சேர்த்தார். குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதோடு, பின்னர் பேட்டிங்கில் 56 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை யூசப் பதான் தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்களாக ஷேன் வார்னே, பியூஸ் சாவ்லா, சொஹைல் டன்வீர் மற்றும் ஸ்ரீசாந்த்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய பாகிஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டன்வீர் 11 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய அதிரடியை அந்த தொடர் முழுவதும் காட்டினார். மேலும் அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளராகவும் டன்வீர் ஜொலித்தார்.

மற்றொரு பக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்ற இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், ஸ்பின் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அந்த தொடரில் பஞ்சாப் அணி அரையிறுதி ஆட்டம் வரை முன்னேற இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.

2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் சிறந்த பிளேயிங் Xi :

ஷான் மார்ஷ்,கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா,ஷேன் வாட்சன்,எம்எஸ் தோனி(Wk), யூசப் பதான், இர்பான் பதான், ஷேன் வார்னே(C), பியூஸ் சாவ்லா,ஸ்ரீசாந்த் மற்றும்
சொஹைல் டன்வீர்