இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வலுவான XI

0
2166
Devdutt Padikkal and Chetan Sakariya

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஐந்து புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது . இந்திய அணியின் முதல் தர மற்றும் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.இளம் அணியுடன் சென்றிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட இத்தொடர் ஜூலை 18 முதல் தொடங்கி ஜூலை 29 வரை கொழும்புவில் நடைப்பெறுகிறது.

இந்திய அணி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அணிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும் சில காலமாகவே விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போன்ற போட்டிகளில் ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பல புதுமுக வீரர்களை உருவாக்கியுள்ளது. முதல் தர மற்றும் முன்னணி வீரர்கள் இல்லாத இந்த அணியில் புதுமுக வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வலுவான இந்திய அணி பார்ப்போம்

- Advertisement -

தொடக்க ஆட்டக்கார்கள் : ஷிகர் தாவன் மற்றும் தேவ்தத் படிக்கல்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரரும் கேப்டனுமாகிய ஷிகர் தவன் தொடக்க வீரராக களமிறங்குவார் ஐ.பி.எல்லில் சிறப்பாக விளையாடியுள்ள ஷிகர் தவன் 8 போட்டிகளில் 380 ரன்கள் குவித்துள்ளார் . அவருக்கு ஜோடியாக அறிமுக வீரர் தேவதத் படிக்கல் . உள்ளூர் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் தொடந்து தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதர்காகவே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் அவருடைய சமீபத்திய பாரம் சிறப்பாக உள்ளது.

மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் : சூரியகுமார் யாதவ் , சஞ்சு சாம்சன் , மனீஷ் பாண்டே

Manish Pandey Team India

சில வருடங்களாகவே ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்ப்பட்டு நம்பிக்கை நட்ச்சத்திரமாக வரும் 30 வயதுமிக்க சூரிய குமார் யாதவ் 3 வது வரிசை , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தினாலும் இந்த ஐ.பி.எல்லில் சிறப்பாக செயப்படுள்ள காரணத்தினாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் பட்ச்சத்தில் நிரந்திர இந்திய அணிக்கு செல்ல வாய்ப்பு அவரை தேடி வரும் சஞ்சு சாம்சன் 4வது வரிசை , இந்திய அணிக்குள் வருவது போவதுமாக இருக்கும் மனீஷ் பாண்டே நீண்ட நாட்களாக அணியில் இருந்தும் தனக்கென இடத்தினை பிடிக்க தவறிய மனீஷ் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டி-20 உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு அதிகம் மனீஷ் பாண்டே 5வது வரிசை

ஆல்ரவுண்டர் : ஹர்டிக் பாண்டியா & குர்னால் பாண்டியா

நவம்பர் மாதம் இந்திய அணிக்கு திரும்பி ஹர்டிக் பாண்டிய ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.இருப்பினும் ஐ.பி.எல்லில் பெரிதாக அவருடைய ஆட்டம் கவரவில்லை அதுபோக தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காரணமாக அவபோது ஓவர்கள் வீச முடியாமல் போவது இந்திய அணிக்கு பின்னடைவாகிறது இத்தொடரில் பழைய பண்டியாவாக வருவாரா என்று பார்ப்போம் .

- Advertisement -

விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செய்பல்பட்டு 5 போட்டிகளில் 388 ரன்களை குவித்துள்ளார் . பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் குர்னால் பாண்டியாவிற்க்கு ஜடேஜா இடத்தை நிறப்ப நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது

பந்து வீச்சாளர்கள் : புவனேஸ்வர் குமார் ,தீபக் சஹர் , சேட்டன் சக்காரியா , யுகேந்திர சஹல்

காயம் காரணமாக அடிக்கடி காணமல் போகும் புவனேஸ்வர் குமார் இத்தொடரில் துணைக்கேப்டனாக பதிவிஏற்றுள்ளார். பந்து வீச்சாளர்களை தலைமை தாங்கும் வீரராகவும் புவனேஷ்வர் குமார் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இருபது ஓவர் உலகக்கோப்பை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இத்தொடரின் மூலம் தனது ஃபார்மை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

புதிய பந்தை கையாள புவனேஷ்வர்குமாருடன் கூட்டணி அமைக்கும் மற்றொரு பந்துவீச்சாளராக தீபக் சகார் நிச்சயம் இருப்பார் . ஒருநாள் அணியில் பெரிதாக சிறப்பிக்கவில்லை என்றாலும் இயற்கையாகவே ஸ்விங்கிங் செய்யும் திறமை தீபக் சஹருக்கு இருப்பதினால் அது அவருக்கு முன்னுரிமையை பெற்றுத்தருகிறது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கண்டுபிடிப்பு இந்த சேட்டன் சக்காரியா ஐ.பி.எல்லில் அனைவரையுமே ஆச்சர்யபடுத்தும் வகையில் தனது ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்ததே அவருக்கு இந்திய அணியின் கதவு வெகு சீக்கிரமாகவே திறக்கப்படுள்ளது.ஐ.பி.எல் போல இலங்கை தொடரிலும் சிறப்பாக செயல் படும் பட்சத்தில் அடிக்கடி இந்தியா அணிக்கான அழைப்பு வந்துக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுகேந்திர சஹல் சமீபமாக பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரது பங்களிப்பு இல்லை என்பது மறுக்கப்படாத உண்மையாக உள்ளது. புவனேஷ்வர்குமாரை போலேவே இவரும் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை கட்டடாயம் கொடுக்கவேண்டும் என்ற நிலையில் உள்ளார் . ஒருவேளை சொதப்பும் பட்ச்சத்தில் குல்திப் யாதவ் , வருண் சக்ரவர்த்தி , ராகுல் சஹர் அவருடைய இடத்தை அடைய காத்திருக்கின்றனர்.