திரைப்படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட அணி

0
474
Irfan Pathan and Harbhajan Singh

பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது கேட்க கேரியரை முடித்துக்கொண்ட உடன் வர்ணனையாளராக அல்லது ஏதேனும் ஒரு கிரிக்கெட் சம்பந்தமான பதவியில் இடம் வகித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் நேர்மாறாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் தைரியமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைக்க அவர்களது ரசிகர்கள் ஒரு பக்கம் மிகப்பெரிய ஊக்கசக்தியாக இருந்து வந்துள்ளனர்.

தங்களுடைய கிரிக்கெட் கேரியரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நிறைய ரசிகர்களின் மனதை சம்பாதித்த அவர்கள், ரசிகர்களின் துணையோடுயும் ஆதரவோடுவும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து திரைப்படங்களில் நடித்த கதையும் உண்டு. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து ஒரு சில திரைபடங்களில் நடித்துள்ளனர். அப்படி திரைப்படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஓபனிங் வீரர்கள் : மோசின் கான் மற்றும் சடகோபன் ரமேஷ்

பாகிஸ்தானைச் சேர்ந்த மோசின் கான், பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் 48 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் பாலிவுட் நடிகையை சேர்ந்த ரீனா ராயை திருமணம் செய்து கொண்டார். கிரிக்கெட்டில் தனது திறமையை காண்பித்து அவர் நடிப்பிலும் தன்னுடைய திறமையை காண்பிக்க தவறவில்லை. பத்வரா என்கிற பாலிவுட் படத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த சடகோபன் ரமேஷ் அவ்வளவு நீண்ட காலம் இந்திய அணிக்கு விளையாடியது கிடையாது. 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்கு அவர் விளையாடினார். இந்திய அணிக்காக விளையாடிய இவர், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் என்கிற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு போட்டா போட்டி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படத்தில் இவர் சடகோபன் ரமேஷ் ஆகவே நடித்தது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் வீரர்கள் : வினோத் காம்ப்ளி, அஜய் ஜடேஜா, சந்தீப் பாட்டீல் மற்றும் சையது கிர்மானி

இந்தியாவைச் சேர்ந்த வினோத் காம்ப்ளி சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராவார். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 1991 முதல் 2000 வரை விளையாடி இருக்கிறார். 17 டெஸ்ட் போட்டிகள், 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 129 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள், என அனைத்து பார்மெட்டிலும் மிக அதிரடியாக விளையாடிய வீரர்.
இவர் பாலிவுட் படங்களான அன்னார்த் மற்றும் பல் பல் டில் கே ஸ்சாட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல கன்னட திரைப்படமான பெட்டநகரி என்கிற திரைப்படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஜய் ஜடேஜா இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 1992 முதல் 2000 வரையில் 9 வருடம் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளிலும், 196 ஒருநாள் போட்டிகளிலும், 111 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் விளையாடி இருப்பது குறிபபிடத்தக்கது.
தன்னுடைய கிரிக்கெட் கேரியரை முடித்ததும், 2003ஆம் ஆண்டு பாலிவுட் படமான கேல் படத்தில் பிரபல நடிகர்களான சன்னி தியோல் மற்றும் சுனில் ஷெட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதேபோல 2009ஆம் ஆண்டு வெளிவந்த பல் பல் டில் கே ஸ்சாட் என்கிற திரைப்படத்திலும், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கை போ சே! என்கிற திரைப் படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் பாட்டீல் 1980 முதல் 1986 வரை இருபத்தி ஒன்பது டெஸ்ட் போட்டிகள் மற்றும் நாற்பத்தி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகடமியில் டைரக்டராகவும், பிசிசிஐ தேர்வுக் கமிட்டியின் தலைமை செயலராகவும் சந்தீப் பாட்டீல் பதவி வகித்தது குறிப்பிடதக்கது. கபி அஜ்நாபி தி என்கிற பாலிவுட் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.அந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது. அத்திரைப்படத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சையது கிர்மானி 1976 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக எண்பத்தி எட்டு டெஸ்ட் போட்டிகளிலும், நாற்பத்தி ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். அதுமட்டுமின்றி 275 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இவர் விளையாடிய வீரரும் ஆவார்.1985ஆம் ஆண்டு வெளிவந்த கபி அஜ்நாபி தி திரைப்படத்தில் சந்தீப் பாட்டீலுடன் இவரும் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் மட்டுமின்றி 2010ஆம் ஆண்டு வெளிவந்த டெட்லி இரண்டாம் பாகத்திலும், 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மழவில்லிநாட்டம் வரே என்கிற திரைப்படத்திலும் இவர் பங்கு பெற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் வீரர் : இர்பான் பதான்

2003 முதல் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2007ஆம் ஆண்டு இந்திய அணியை வென்ற உலக கோப்பை டி20 தொடரிலும், 2013 ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இவர் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் வீரராக வலம் வந்த இவர் தற்போது தமிழ் திரைப்படமான கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிமான்டி காலனி மற்றும் இமைக்காநொடிகள் திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைபடத்தில் இவர் நடித்திருக்கிறார். அந்தப் படம் கூடிய விரைவில் வெள்ளிதிரைக்கு வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்கள் : ஹர்பஜன் சிங், பிரெட் லீ, சலில் அங்கோலா மற்றும் ஸ்ரீசாந்த்

1998 முதல் 2016ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முஜ்சே ஷாதி கரோகி என்கிற பாலிவுட் திரைப்படத்திலும், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த பஜ்ஜி இன் பிராப்ளம் என்கிற பஞ்சாபி திரைப்படத்திலும், 2015ஆம் ஆண்டு வெளிவந்த செகண்ட் ஹேண்ட் ஹஸ்பன்ட் என்கிற பாலிவுட் திரைப்படத்திலும், 2021ஆம் ஆண்டு வெளிவந்துள்ள டிக்கிலோனா தமிழ் திரைப்படத்திலும் சிறப்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்த அவர் பிரெண்ட்ஷிப் என்கிற தமிழ் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவராக, முதல் முறை கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அந்தப் படம் இந்த வருடம் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரெட் லீ 1999 முதல் 2012ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்கு சர்வதேச அளவில் விளையாடியிருக்கிறார். ஆஸ்திரேலிய அணியில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் விளையாடிய இவரது பெயர், தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர் பட்டியலில் எப்பொழுதும் இடம்பெறும். ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளிலும், 221 ஒருநாள் போட்டிகளிலும் இவர் விளையாடி இருக்கிறார். சர்வதேச அளவில் 690 விக்கெட்டுகளை பிரெட் லீ கைப்பற்றியுள்ளார். 2015ஆம் ஆண்டு வெளிவந்த அன் இந்தியன் என்கிற இந்தோ-ஆஸ்திரேலிய திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது.

சலில் அங்கோலா 1989 முதல் 1993 வரை இந்திய அணிக்காக சர்வதேச அளவில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தனது கிரிக்கெட் கேரியரை 1997ஆம் ஆண்டு முடித்த இவர் 1999 ஆம் ஆண்டு கோரா காகஸ் என்கிற தொலைக்காட்சித் தொடரில் முதல் முறையாக நடித்தார். அதன் பின்னர் குருசேத்ரா, பிதா, ரிவயாட், ஏக்தா போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களில் இவர் பங்கு பெற்றிருக்கிறார். முக்கியமாக 2006ஆம் ஆண்டு நடந்த முதல் பிக் பாஸ் தொடரில் இவர் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. வித்யூத் ஜம்வால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த தி பவர் என்கிற பாலிவுட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீசாந்த் 2005 முதல் 2011-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள் 53 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ரஞ்சி டிராபி தொடரில் கேரள அணிக்கு விளையாடிய வீரர்களில் ஐசிசியின் சர்வதேச உலக கோப்பை டி20 தொடரில், இந்திய அணிக்கு தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை இவர் தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறார்.இவரும் ஒருசில தொலைக்காட்சித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார். முக்கியமாக 2018ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தொடரில் கலந்து கொண்டு அந்த சீசனில் ரன்னர் அப் பட்டத்தை வென்றார். தொலைக்காட்சி தொடர்களை போல திரைப் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். அக்ஷர் இரண்டாம் பாகம் மற்றும் கபரெட் என்கிற பாலிவுட் திரைபடத்தில் இவர் நடித்து இருக்கிறார். அதேபோல டீம் 5 என்கிற மலையாளத் திரைப்படத்திலும், கேம்பி கவுடா 2 என்கிற கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.