“களநடுவர் அவுட் இல்லைன்னு தான் சொன்னாரு… என்னுடைய கேப்டன்ஷியில்..” – பேர்ஸ்டோவ் விக்கெட்டுக்கு குரல் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!

0
5262

“களத்தில் இருந்த நடுவரிடம் கேட்டேன் அவர் இல்லை என்று தான் சொன்னார் கடைசியில் முடிவுகள் எல்லாம் இப்படி வந்துவிட்டது. உண்மையில் என்னுடைய கேப்டன்ஷியில்..” பேர்ஸ்டோவ் சர்ச்சையான முறையில் ரன் அவுட் செய்யப்பட்டதற்கு கருத்து தெரிவித்த பென் ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக மிச்சல் ஸ்டார்க் பிடித்த கேட்ச் அவுட்டில்லை என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக பேர்ஸ்டோவ் விக்கெட்டை சர்ச்சையான முறையில் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்ததும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 193 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்திருந்த போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இருந்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது இதற்கு பின்னர் வரும் வீரர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் ஆஸ்திரேலியா அணியும் இவர்களது பார்ட்னர்ஷிப் உடைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

அப்போது பேர்ஸ்டோவ், கிரீஸ் உள்ளே நன்றாக பேட்டை வைத்துவிட்டு களத்தை விட்டு சற்று வெளியே வந்தவுடன் அலெக்ஸ் கேரி ஸ்டம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் கேட்டார். களத்தில் இருந்த நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் இந்த முடிவுக்கு தீர்ப்பு கேட்டனர். மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்ததார். இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் அணியினர் மத்தியில் குழப்பம் நிலவியது.

இதற்காக சர்ச்சையான முறையில் சூழ்ச்சி செய்து விக்கெட் வீழ்த்தி விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மீது தொடர்ந்து வைக்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 43 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “ஆஸ்திரேலியா அணியினர் ரன் அவுட் கிளைம் செய்த போது நான் களத்தில் இருந்த நடுவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இல்லை என்றபடியே எனக்கு தலையசைத்து சொன்னார். இருப்பினும் வழக்கம் போல மூன்றாம் நடுவரிடம் முடிவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடைசியில் அவுட் என்று வந்துவிட்டது.

மூன்றாம் நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் நான் பந்துவீச்சு பக்கம் இருந்திருந்தால் என்னுடைய கேப்டன்ஷியில் இத்தகைய செயல் செய்வேனா என்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்திருப்பேன். ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன்.

எல்லாம் விதிகளுக்கு உட்பட்டு நடந்திருப்பதாக பார்க்கிறேன். அவுட் என்று வந்துவிட்டது. போட்டியும் முடிந்துவிட்டது. அடுத்து வரும் 3 போட்டிகளில் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.