“ஜோ ரூட்டை கெடுத்தது ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் ரெண்டு பேர்தான்.. மொத்தமா அவர முடிச்சுட்டாங்க!” – இங்கிலாந்து லெஜெண்ட் அதிரடி குற்றச்சாட்டு!

0
685
Root

நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்ற போது என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்ததோ, தற்பொழுது இலங்கை அணிக்கு எதிராக தோற்று உலகக்கோப்பை முதல் சுற்று உடன் வெளியேற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய ஆடுகளங்களுக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ளாமல், தொடர்ச்சியாக ஒரே முறையில் அதிரடியாக விளையாடச் சென்று தங்களது விக்கெட்டுகளை மிக மலிவாக கொடுத்து அணியை தோல்வியடைய வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் அவர்கள் மிக நீளமான பேட்டிங் வரிசையை வைத்து கடைசி இரண்டு தோல்விகளில் 200 ரண்களை கூட எட்ட முடியாமல் போனது விமர்சனங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

மேலும் அவர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு ஆல் கவுண்டர்களை வைத்து ஒப்பேற்றுவது போல, பேட்டிங் நீளத்தை அதிகமாக வைப்பதற்கு, ஆல்ரவுண்டர்களை அதிகம் அணியில் வைத்து, பவுலிங் யூனிட்டை பலம் இல்லாததாக செய்துவிட்டார்கள். இதெல்லாம் சேர்ந்து இங்கிலாந்து அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் லெஜெண்ட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் கூறும் பொழுது “எங்கள் அணியின் வீரர்களில் பல எதிரணியையும் ஆடுகளத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாட நினைக்கிறார்கள். இது புத்திசாலித்தனமானது கிடையாது.

- Advertisement -

இந்த அணி ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையை வென்ற அணி. ஆனால் அந்த உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடந்த காரணத்தினால் ஆடுகளம் குறித்து எங்கள் வீரர்கள் நன்றாக அறிந்தவர்களாக இருந்தார்கள்.

ஜோ ரூட்டை தவிர எங்களது அனைத்து வீரர்களும் பந்தை கடுமையாக அடிக்கவே செல்கிறார்கள். இந்திய ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமாக ஒன்றும் கிடையாது. ஆனால் சில நேரங்களில் பந்து நின்று வருகிறது.

இப்படி பந்து நின்று வரும் பொழுது நீங்கள் பந்தை வரவிட்டு ஆட வேண்டும். மேலும் உங்களுடைய மணிக்கட்டை பயன்படுத்தி ஷாட்கள் விளையாட வேண்டும். இதைப் பழகிக் கொள்வது ஒன்றும் மிக கடினமான காரியம் கிடையாது. ஆனால் நீங்கள் இதை சரி செய்ய உங்களுக்கு பயிற்சியும் அதற்கான நேரமும் தேவை.

ஜோ ரூட் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர். அவரால் களத்தில் நேரம் செலவு செய்து முழுமையாக நின்று விளையாட முடியும். அவரது சிறந்த பேட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைத்து நிற்க, மற்றவர்கள் அவரைச் சுற்றி விளையாடி ஸ்கோர் கொண்டுவர முடியும்.

ஆனால் ஸ்டோக்ஸ் மற்றும் மக்களும் உருவாக்கிய பாஸ்பால் புதிய அலையில், ரன்களை மிக வேகமாக கொண்டு வர வேண்டிய காரணத்தினால், அசாதாரணமான தவறுகளை செய்ய வைத்து, வாங்கி ஷாட்களை சோர்வூட்டை விளையாட வைத்து, அவரது திறமையை உறிஞ்சி விட்டார்கள்!” என்று கடுமையாக கூறியிருக்கிறார்!