வீடியோ: அவுட்டான பிறகு முறைகேடாக பந்துவீச்சுகிறார் என குற்றம்சாட்டிய ஸ்டாயினிஸ்; வருத்தெடுத்த நெட்டிசன்கள்!!

0
1805

100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டாயினிஸ் ஆட்டமிழந்த பிறகு செய்த செயலால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் சவுத் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபிள் இரு அணிகளும் மோதின. இப்படி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற ஓவல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சவுத் பிரேவ் அணி 100 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாயினிஸ் 27 பந்துகளில் 37 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரின் விக்கெட்டை ஓவல் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹஸ்னன் வீழ்த்தினார். ஸ்டாயினிஸ் ஆட்டமிழந்த பிறகு பெவிலியன் திரும்பும்பொழுது, ஹஸ்னன் பந்துவீச்சை குறிவைத்து சர்ச்சையான பாவனைகளை செய்தபடியே உள்ளே சென்றார்.

ஹஸ்னன் பந்து வீசவில்லை, முறைகேடாக எரிகிறார் என்ற விமர்சனத்தை தனது ஆக்சன் மூலம் ஸ்டாயினிஸ் வெளிப்படுத்தினார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு அதிகமாக பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஹஸ்னன் பந்துவீச்சு பற்றி மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஹென்றிக்குவஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் “நன்றாக பந்து எரிகிறீர்கள்” என குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வு பிக்பாஸ் லீக் சுற்றின்போது நேர்ந்தது. அதன் பிறகு ஹஸ்னன் பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் தேர்ச்சி பெற்ற பிறகே தற்போது பந்துவீச அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

இன்னொரு ஆஸ்திரேலியா வீரர், தான் ஆட்டமிழந்த எரிச்சலில் இப்படி குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதால் சமூக வலைதளங்களில் இத்தகைய கொதிப்பு எழுந்திருக்கிறது. போட்டியை கண்காணிப்பதற்கு நடுவர் இருக்கிறார். மேலும் மூன்றாவது நடுவரும் இருக்கின்றனர் முறைகேடாக பந்துவீசினால் நிச்சயம் அவர்களால் தடுக்கப்பட்டிருப்பார். ஆட்டம் இழந்த பிறகு அதை பொறுத்துக் கொள்ளாமல் இப்படி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

போட்டியை பொறுத்தவரை, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஓவல் அணி 18 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 48 பந்துகளில் 108 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். இவர் 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.