“எப்படிடா!!…அசாத்தியமான கேட்சை அசால்ட் ஆக எடுத்த ஸ்டீவன் ஸ்மித் வீடியோ இணைப்பு!

0
64

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுப்மண் கில் ரன்கள் எதுவும் எடுக்காமல் மிச்சல் ஸ்டார்க் பதிச்சில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி ரோஹித் சர்மா உடன் இணைந்து அதிரடியாக ஆட இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் ஸ்டார்க். 32 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்தது இந்தியா. இந்நிலையில் களம் இறங்கிய கேஎல் ராகுல் விராட் கோலி உடன் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரும் துரதிஷ்டவசமாக ஸ்டார்க் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆகி மேலும் அதிர்ச்சி அளித்தார். 48 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விராட் கோலியுடன் ஆட வந்தார் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா.

- Advertisement -

இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு ரன் எடுத்த நிலையில் ஷான் அபாட் வீசிய பந்தில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு ஸ்டீவன் சுமித்திடமிருந்து விலகிச் சென்ற பந்தை சிறப்பான டைவ் மூலம் அசாத்தியமான கேட்ச் பிடித்து ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றினார் . அந்தக் காட்சிக்கான வீடியோ இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.