150 டெஸ்ட் இன்னிங்ஸ் முடிவில் முன்னணி வீரர்கள் டிராவிட், சேவாக் & சச்சினைப் பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திற்கு முன்னேற்றம்

0
109
Sachin Tendulkar and Steve Smith

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சமயல் முடிவடைந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது.

- Advertisement -
தொடர்ச்சியாக மூன்று அரை சதகங்கள் குவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித்

முதல் டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் 2வது டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் 59 ரன்கள் என தொடர்ச்சியாக ஸ்டீவ் ஸ்மித் மூன்று அரை சதங்கள் குவித்து அசத்தி வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய இருபத்தி ஏழாவது சதத்தை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணிக்கு எதிராக குவித்தார். அதன்பின்னர் 14 இன்னிங்ஸ்களில் ஏழு அரை சதங்கள் குவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய இருபத்தி எட்டாவது சதத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். அது ஏனோ நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் குவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் பற்றி சக வீரர் உஸ்மான் கவாஜா ஒரு சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக நீண்ட வருடம் அறுபதுக்கு மேல் பேட்டிங் ஆவெரேஜை வைத்திருக்கிறார். பந்துவீச்சாளர் 100 பந்துகள் வீசுகிறார் என்றால் அதில் 99 பந்துகளை ஸ்டீவ் ஸ்மித் அடித்துவிடுவார்.

- Advertisement -

இருபத்தி எட்டாவது அரை சதம் குவிக்க நாட்கள் எடுத்துக் கொண்டாலும், ஒருபுறம் அவர் தொடர்ச்சியாக அரைசதங்கள் குவித்து வருகிறார். கூடிய விரைவில் அந்த ஒரு பெரிய ஸ்கோரை அவர் அடித்தவுடன், இன்னும் நிறைய பெரிய ஸ்கோர்கள் அவர் குவிப்பார் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

முன்னணி வீரர்களை பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் 150 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த குமார் சங்கக்காரவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு ஸ்டீவ் ஸ்மித் முன்னேறியுள்ளார்.

150 டெஸ்ட் இன்னிங்சில் முடிவில் 7993 ரன்களுடன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் குமார் சங்ககாரா (7913 ரன்கள்), மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (7869 ரன்கள்), நான்காவது இடத்தில் சேவாக் (7694 ரன்கள்) மற்றும் 5வது இடத்தில் ராகுல் டிராவிட் (7680 ரன்கள்) இருக்கின்றனர்.

ஸ்டீவ் ஸ்மித் 8000 டெஸ்ட் ரன்கள் குவிக்க 7 ரன்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், கூடிய விரைவில் அவருக்கு மற்றொரு சாதனையும் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.