இந்திய அணியை பற்றி அந்த ஒரு விஷயத்தை ஏத்துக்குறேன்.. உலகத்தில் 2 பெஸ்ட் டீம் இதுதான் – ஸ்மித் பேட்டி

0
340
Smith

இந்திய அணி ஆஸ்திரேலிய ஆவது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டில் அடுத்து நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியா சென்று இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கின்ற காரணத்தினால் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணியில் பெரிய பலமாக இருக்கக்கூடிய விஷயம் வெளிநாடுகளில் சென்று டெஸ்ட் போட்டிகளை மட்டும் அல்லாது தொடரையும் கைப்பற்ற முடிகின்ற வேகப் பந்துவீச்சு வரிசை இருப்பதுதான். இந்த வகையில் பும்ரா, சமி, சிராஜ் மூவருமே இந்த தொடருக்கு கிடைப்பார்கள் என்பது நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது.

மேலும் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலும் தற்பொழுது நடந்து வருகிறது. இத்துடன் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி ஐபிஎல் தொடரில் ஆச்சரியப்படுத்திய மயங்க் யாதவ் ஆஸ்திரேலியா தொடருக்கு செல்லவும் பெரிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவே வெளியில் பேசப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு அவர்களது நாட்டில் சவால் கொடுக்க தயாராகவே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய ஓய்வு மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து பேசி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கூறும்பொழுது “தற்போது ஓய்வு பெறும் எந்த திட்டமும் என்னிடம் இல்லை. நான் விளையாடுவதை ரசித்து விளையாடுகிறேன். மேலும் நான் நிம்மதியாக இருக்கிறேன்.இந்த கோடைகாலத்தில் விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்திய அணி நல்ல சவால் கொடுக்கும் மேலும் அவர்கள் ஒரு சிறந்த கிளாஸ் அணி. தற்போது உலகின் சிறந்த ஆண் இரண்டு அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : 116% அதிகரித்த ஐபிஎல் வருமானம்.. கோடிகளில் புரளும் பிசிசிஐ.. 2023 சீசன் வருமானம் எவ்வளவு தெரியுமா?

நான் எந்த இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இதுவரை நடத்திய உரையாடல்களில், நான் தற்போது இங்கிலாந்து சென்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாட போகிறேன், அதற்கு மேல் இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்பதுதான். கவாஜா மற்றும் லபுசேன் இருவரும் நான் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் நான் எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -