என்னை இந்த ஒரு இந்திய வீரர் ரொம்ப எரிச்சல் படுத்துவார்.. அதுக்கான காரணம் இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

0
201
Smith

இந்திய அணியின் ஒரு நட்சத்திர வீரர் தனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டக்கூடிய வீரராக இருந்திருக்கிறார் என ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு பேட்டி வீடியோவில் ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணி வீரர்கள் பற்றி தங்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

ஆசஸை விட அதிக எதிர்பார்ப்பு

உலக கிரிக்கெட்டில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் தொடரி மிகவும் புகழ்பெற்ற டெஸ்ட் தொடராக இருந்து வந்திருக்கிறது. போட்டித் தன்மையை ரீதியாகவும் வருமானம் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் தனித்துவம் கொண்ட தொடராக அது இருந்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது உலகின் மிகச்சிறந்த இரண்டு டெஸ்ட் அணிகளாக விளங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் டெஸ்ட் போட்டி ஆசஸ் தொடருக்கு நிகராக மாறி இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் டெஸ்ட் போட்டிக்காக உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

எரிச்சல் ஊட்டக்கூடிய வீரர்

ஸ்டீவ் ஸ்மித் பேசும்பொழுது “ஜடேஜா சிறந்த வீரர் என்கின்ற காரணத்தினால்தான் நான் களத்தில் கோபப்படுகிறேன். ரன் எடுப்பது, விக்கெட் எடுப்பது, சிறந்த கேட்ச் பிடிப்பது என அவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு தாக்கத்தை செலுத்தக்கூடிய வீரராக வழியை கண்டுபிடிப்பார். சில சமயங்களில் அது எனக்கு எரிச்சல் ஊட்டும். ஆனால் அவர் ஒரு நல்ல வீரர்” என்று கூறியிருக்கிறார்.

லபுசேன் கூறும்பொழுது “ரிஷப் பண்ட் எப்பொழுதும் வேடிக்கையாக இருக்கக்கூடியவர். அவர் அந்த வேடிக்கை தன்மையை எப்பொழுதும் போட்டியில் தொடர்ந்து கொண்டு வருவார். மாறாத சிரிப்புடன் அவரது விளையாட்டை அவர் விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணி பக்கத்துல கூட நாங்க இல்ல.. இதுக்கு முன்ன இப்படி ஒன்ன பாக்கவும் இல்ல – பங்களாதேஷ் கோச் பேட்டி

டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “விராட் மிகவும் சிறந்த வீரர் என்பதால் அவரைத்தான் எல்லோரும் பிடிக்கும் என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன். அவர் எப்பொழுதும் ரன்கள் எடுத்துக் கொண்டே இருப்பார்.மேலும் எப்பொழுதும் ஆற்றலோடு இருக்கும் அவர் அதை அணிக்கும் கொண்டு வருவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -