அம்பத்தி ராயுடுவின் ஓய்வு ட்வீட் நீக்கம் பற்றி பயிற்சியாளர ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

0
99
Stephen Fleming and Ambati Rayudu

ஐ.பி.எல் வரலாற்றில் 2020ஆம் ஆண்டு சீசனை விட சென்னை அணிக்கு மிக மோசமான சீசன் இந்த ஆண்டுதான். 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் ஆறு வெற்றிகளைப் பெற்றிருந்த சென்னை அணி, இந்த ஆண்டு ஐந்து வெற்றிகளோடு முடிக்கும் நிலையில்தான் உள்ளது. இது நான்காகவும் மாறலாம்!

இப்படியான மோசமான சரிவை சென்னை அணி சந்தித்திருக்க, அந்த அணியின் மிக முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு, தனக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல் சீசன் என்றும், ஓய்வுபெற போவதாகவும், தான் விளையாடிய மும்பை, சென்னை அணி நிர்வாகத்திற்கும், இரசிகர்களுக்கும் நன்றி என ட்வீட் செய்திருந்தார். சமூக வலைத்தளங்களில் பலர் அம்பதி ராயுடுக்கு வாழ்த்துச் செய்திகளை பதிய ஆரம்பித்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் சற்று நேரத்தில் அம்பதி ராயுடுவின் ட்வீட் நீக்கப்பட்டிருந்தது. இதுக்குறித்த மேலதிக செய்திகள் தெரியாமல் இருந்தது. பிறகு சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் இதுக்குறித்து விளக்கும் போது, அம்பதி ராயுடு அணிக்கு உண்டாகி இருக்கும் தோல்விகளால் மனச்சோர்வில் இப்படிச் செய்தி வெளியிட்டு இருக்கலாம். ஆனால் அவர் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று கூறி, அப்போதைக்கு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நேற்று குஜராத் அணியுடன் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து, சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியார் ஸ்டீபன் பிளமிங் அம்பதி ராயுடுவின் ட்வீட் குறித்து பேசும்போது “இது ஏமாற்றம் அளிக்கவில்லை. உண்மையைச் சொல்வதானால் இது டீகோப்பையில் ஏற்பட்ட ஒரு புயலைப்போலான ஒரு சின்ன விசயம்தான். அவர் நன்றாகத்தான் இருக்கிறார். இது அணிக்குள் எந்த சலசலப்பையும் உருவாக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் !

மேலும் இந்த தொடரின் மத்தியின் அம்பதி ராயுவின் பேட்டிங் அபாரமாகவே இருந்தது. 12 ஆட்டங்களில் 271 ரன்களை 27.10 என்ற சராசரியில் அடித்திருக்கிறார். இந்த ஆண்டு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் நன்றாகவே இருக்கிறது. ஜடேஜா விலகல் சர்ச்சைக்கு அடுத்து அம்பதி ராயுடுவின் இந்த ட்வீட் விவகாரம் பல விவாதங்களையும், சந்தேகங்களையும், கவலையையும் கிரிக்கெட் விமர்சகர்கள், இரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது என்றே கூறலாம்!

- Advertisement -