சுரேஷ் ரெய்னா ஃபார்ம் குறித்து ஒரு வழியாக மௌனம் கலைத்த சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

0
1989
Suresh Raina and Stephen Fleming

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 9 போட்டியில் வெற்றி கண்டுள்ளது. 9 போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில், 18 புள்ளிகளுடன் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக நேற்று சென்னை அணி தகுதி அடைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சந்தோசத்தை ஒரு பக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் , சென்னை அணியில் தவிர்க்க முடியாத முக்கிய வீரராக பார்க்கப்படும் சுரேஷ் ரெய்னா சரியான ஃபார்மில் தற்போது இல்லை. அவரைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஒரு சில விஷயங்களை தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

ஒரே ஒரு அரை சதத்துடன் தடுமாறி வரும் மிஸ்டர் ஐபிஎல்

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் வருடம் முதல் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா எப்பொழுதும் இடம் பிடிப்பார். ஐபிஎல் தொடரில் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரராக சுரேஷ் ரெய்னா வலம் அழகிய தருணங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

அப்படி விளையாடிய சுரேஷ் ரெய்னா நடப்பு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சற்று சுமாராக தான் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக மிக அற்புதமாக விளையாடி அரைசதம் குவித்தார். ஆனால் அதற்கடுத்து தொடர்ச்சியாக 9 போட்டிகளிலும் அவ்வளவு சிறப்பாக அவர் விளையாடவில்லை. முதல் போட்டியில் 54 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னா அதற்கு அடுத்த 9 போட்டிகளில் மொத்தமாகவே வெறும் 103 ரன்கள் மட்டுமே தற்பொழுது வரை குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 19.62 ஆக மட்டுமே உள்ளது.

அவருக்கென ஒரு தனி இடத்தை நாங்கள் வைத்திருக்கிறோம்

நல்ல டச்சில் இல்லாத சுரேஷ் ரெய்னா குறித்து ரசிகர்கள் ஒரு பக்கம் விமர்சனம் எழுதி வந்த நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சுரேஷ் ரெய்னா குறித்து தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய விதம் எல்லோருக்கும் தெரியும்.

- Advertisement -

அவருக்கென ஒரு தனி இடத்தை நாங்கள் சென்னை அணியில் வைத்திருக்கிறோம். நாங்கள் எதிர்பார்ப்பதை எந்த நேரத்திலும் செய்து காட்டக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. அவருக்கான நேரத்தை நாங்கள் எப்பொழுதும் நிச்சயமாக வழங்குவோம். இனி வரும் போட்டிகளில் தன் இயல்பான வழக்கமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார். கடந்த சில ஆட்டங்களில் அவருடைய பங்களிப்பு சற்று குறைவாக இருந்தாலும், இனிவரும் ஆட்டங்களில் அணிக்கு தேவையான பங்களிப்பை முழுவதுமாக சுரேஷ் ரெய்னா வழங்குவார் என்று ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளை இரவு நடக்க இருக்கின்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அபுதாபியில் நடக்க இருக்கும் இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா பழையபடி அதிரடியாக விளையாடுவார் என்று அனைத்து ரசிகர்களும் இப்போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.