சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலில் பவுலர் ஆக இருந்து பின்னர் பேட்ஸ்மேனாக மாறிய 5 வீரர்கள்

0
744
Steve Smith

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் இளம் வயதிலேயே தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை முன்கூட்டியே நிர்ணயித்து விட்டு தான் விளையாட தொடங்குவார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் மிகப்பெரிய பவுலர்கள் ஆகவேண்டும் என்ற கனவோடு முதலில் பவுலிங் போட ஆரம்பித்து விட்டு அதன் பின்னர் எதிர்பாராத விதமாக பேட்டிங் விளையாட ஆரம்பிப்பார்கள்.

ஆனால் அப்படி விளையாட ஆரம்பித்து சர்வதேச அளவில் மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் ஆக சில கிரிக்கெட் வீரர்கள் உருவெடுத்த கதை உண்டு. அவர்கள் அவ்வாறு பேட்ஸ்மேன்களாக பின்னாளில் தங்கள் அணிக்காக விளையாடுவார்கள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அப்படி விதியின் காரணமாக முதலில் பவுலராக இருந்துவிட்டு பின்னர் பேட்ஸ்மேனாக விளையாடிய வீரர்களை பற்றி பார்ப்போம்

- Advertisement -

கேமரூன் ஒயிட்

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பிராடு ஹாக் மிக அற்புதமாக பந்து ஆனால் அவர் ஓய்வு எடுத்த பின்னர், அவருக்கு அடுத்தபடியாக கேமரூன் ஒயிட் ஆஸ்திரேலிய அணிக்காக லெக் ஸ்பின் பவுலிங்கை போட வந்தார். ஒரு பவுலராக அவருக்கு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எடுத்த முதல் விக்கெட்டே இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டு தான்.

ஆனால் அதன் பின்னர் அவரால் சீரான முறையில் பந்து வீச முடியாத காரணத்தினால் பின்னர் பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். பேட்டிங்கில் கவனம் செலுத்திய கேமரூன் மிக அற்புதமாக அதன் பின்னர் விளையாட ஆரம்பித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 97 ஒருநாள் போட்டிகள் மற்றும் 47 டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி

என்னுடைய 17 வயதில் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஒரு சிறுவனாக விளையாட தொடங்கியவர் ரவி சாஸ்திரி. முதலில் ஸ்பின் பவுலர் ஆக தனது திறமையை காண்பித்தார். அதன் பின்னர் பேட்டியில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார்.

- Advertisement -

அதன் பின்னர் மூன்று வருடம் கழித்து ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக தனது அணிக்காக விளையாட தொடங்கினார். ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக மொத்தமாக 80 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்களும் அதேபோல ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் அடித்துள்ளார்.

சோயப் மாலிக்

தன்னுடைய பதினேழாவது வயதில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தொடங்கினார். முதலில் ஸ்பின் பவுலர் ஆக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் சில காரணங்களால் பேட்டிங்கில் கவனம் செலுத்தி பாகிஸ்தான் அணிக்காக ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக உருவெடுத்தார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளில் நன்றாக விளையாடி பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகள் 287 ஒருநாள் போட்டிகள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

சனத் ஜெயசூரியா

ஜெயசூர்யா ஒரு அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவருடைய ஆரம்ப காலங்களில் அவருடைய பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. அவருடைய பௌலிங் திறமைக்காக மட்டும்தான் அணியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் அவரைத் தொடர்ந்து விளையாட வைத்தது. 1989 ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளில் அவருடைய பேட்டிங் அவரேஜ் 30க்கும் கம்மியாக தான் இருந்தது.

ஆனால் அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது 1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர். அங்கே நன்றாக விளையாட தொடங்கியவர் அதன் பின்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 21,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். அதில் 42 சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணிக்காக முதலில் பவுலிங் போட தொடங்கினார். இவரது பவுலிங் திறமையை கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இவர்தான் அடுத்த ஷேன் வார்னே என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்கினார். ஆனால் அதன் பின்னர் இவரால் சரியாக பவுலிங் போட முடியவில்லை. பின்னர் பேட்டிங்கில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். அதற்கு பிறகு தற்போது ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்..

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 7327 ரன்களை அடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இவரது அவரேஜ் 62.84 ஆகும். ஒருநாள் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி இதுவரை மொத்தமாக 4162 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவருடைய ஆவரேஜ் 42.47 ஆகும்.