டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்!

0
122
England

இங்கிலாந்து அணி இன்று அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தனது 15 பேர் கொண்ட அணி யையும் 3 ரிசர்வ் வீரர்களையும் அறிவித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான நட்சத்திர வீரர் ஒருவர் தற்போது காயத்தால் டி20 உலக கோப்பையில் இருந்து விலகி இருக்கிறார். அவரது விலகல் இங்கிலாந்து அணிக்கு சர்வ நிச்சயமாய் பெரிய பின்னடைவாகத்ததான் இருக்கும்!

இங்கிலாந்து டெஸ்ட் அணி தற்போது புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரின் கீழ் பாஸ்பால் என்று அழைக்கப்படும் அதிரடியான முறையில் எதிரிகளை துவம்சம் செய்து வருகிறது.

- Advertisement -

கடந்த மாதங்களில் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும் பிரண்டன் மெக்கல்லம் புதிய பயிற்சியாளராகவும் பொறுப்பேற்ற முதல் தொடருக்கு ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட நியூசிலாந்து அணி இங்கிலாந்து வந்திருந்தது. அந்தத் தொடரில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ஒரு புதிய எழுச்சியைக் கண்டது. அதுதான் தாக்குதல் பாணி ஆட்டம். இந்தவகை ஆட்டத்திற்கு அந்த அணிக்கு புதியதாய் வந்திருக்கும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமின் செல்லப் பெயரான பாஸ் என்பதை வைத்து பாஸ்பால் என அழைக்கப்படுகிறது!

இங்கிலாந்தின் இந்த தாக்குதல் பாணி ஆட்டத்திற்கு எங்க அச்சாணியாய் இருந்து இங்கிலாந்து பேட்டிங் யூனிட்டை பலம் ஆக்கியவர் என்றால் இங்கிலாந்தின் கோடைகால கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோதான் அது. நியூசிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்களில் அவரது தனிப்பட்ட சத ஆட்டங்கள் இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்ததோடு எதிரணிகளின் நம்பிக்கையை அடியோடு குறைத்து விரக்தியில் தள்ளியது. அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத ஆட்டங்களில் சூழலில் அவர் அதிரடியில் எதிரணிகளை மிரட்டினார்.

தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சவுத் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது, இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்று இருக்க, மூன்றாவது போட்டி நடக்க இருக்கிறது. இந்த மூன்றாவது போட்டிக்கும் அடுத்து வரவுள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கும் காயத்தால் ஜானி பேர்ஸ்டோ அணியில் இடம்பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த அறிவிப்பு இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மற்றும் ஒரு விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லருக்கு பெரிய இழப்பாகவும் நெருக்கடி ஆகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு இந்த சீசனில் ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங் பார்ம் மிக சிறப்பாக இருந்து வந்தது.

இன்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத விதமாய் அவர் காயத்தால் வெளியேறி இருப்பது, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் டி20 உலக கோப்பையில் ஒரு இழப்புதான். அவர் காயத்திலிருந்து மீண்டு சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது!