ரிஷப் பண்ட் கார் விபத்து-பாகிஸ்தான் வீரர்களின்  உருக்கமான  பிரார்த்தனை!

0
484
rishabh pant

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி 93 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் .

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு துபாய்க்கு சென்று தோனி உடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடிவிட்டு நாடு திரும்பினார் . இந்நிலையில் அவர் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டில் உள்ள ரொக்கிரி செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார் .

- Advertisement -

அதிகாலை ஐந்தரை மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த அவரது ஹை பிரீமியம் பிஎம்டபிள்யூ சாலையோர தடுப்பில் மோதி கடும் விபத்திற்கு உள்ளானது . இந்த விபத்தில் மயிரிழையில் உயிர்த்தப்பினார் ரிசப் பண்ட் . வாகனம் தடுப்பில் மோதி தீப்பிடிக்க போகும் நேரத்தில் காரின் கண்ணாடியை உடைத்து அவர் தப்பி உள்ளார் .

விபத்து நடந்த உடன் அருகில் உள்ள ஷாக் ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் முதற்கட்ட சிகிச்சைகளுக்கு பின் மேல் சிகிச்சைக்காக உத்தராகண்டின் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் .அவருக்கு தேவையான எல்லா சிகிச்சைகளையும் உடனடியாக வழங்க உத்தரகாண்ட் அரசும் பிசிசிஐயும் தெரிவித்துள்ளது ..

ரிசப் பண்ட் விபத்துக்கு உள்ளானதை தொடர்ந்து அவர் விரைவாக குணமடைய பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் பாகிஸ்தான அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான சாகின் அப்ரிதி ,சதாப்கான்,சோயப் மாலிக் ,முகமது ஹாபீஸ் போன்ற வீரர்கள் ட்விட்டரின் மூலம் தங்களின் பிரார்த்தனைகளையும் அவர் விரைவில் குணம் பெற தங்களது வேண்டுதல்களையும் தெரிவித்துள்ளனர் .

- Advertisement -

இந்த விபத்தை தொடர்ந்து பதிவிட்டுள்ள சாகின் அப்ரிதி “என்னுடைய பிரார்த்தனைகள் உன்னுடனே இருக்கின்றன விரைவில் குணமடைந்து வாருங்கள்”என்று பதிவிட்டுள்ளார் .

சோயப் மாலிக் தனது” ட்விட்டரின் ரிஷப் பண்டின் விபத்து செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் .

இந்த விபத்து தொடர்பாக பதிவிட்டுள்ள சதாப்கான் “நீங்கள் விரைவில் குணமடைந்து வர என்னுடைய பிரார்த்தனைகள்” என்று பதிவிட்டுள்ளார் .

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி “தன்னுடைய பதிவில் உங்களுக்கு எதுவும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்று நம்புகிறேன் . இறைவனுடைய நாட்டத்தால் விரைவில் குணமடைந்து களத்திற்கு வர என்னுடைய பிரார்த்தனைகள்”என்று பதிவிட்டுள்ளார் .

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹாபீஸ் “என்னுடைய பிரார்த்தனைகள் எப்பொழுதும் உங்களுக்காகவே இருக்கிறது விரைவில் குணமடைந்து வாருங்கள் “என்று பதிவிட்டு இருக்கிறார்.

என்னதான் இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் அரசுகளுக்கும் இடையே மோதல்கள் இருந்தாலும் வீரர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பரம் மரியாதை மற்றும் நட்பு மனதை நெகிழ்ச்சி கொள்ள செய்வதாக உள்ளது