கடைசி நேரத்தில் திருப்பம் – சோனியிடம் இருந்து ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தட்டிச் சென்ற ஸ்டார் நிறுவனம்

0
211
Star vs Sony IPL TV rights

இன்றைய தேதியில் கிரிக்கெட்டில் உரிமையாளர்கள் டி20 தொடரில் நம்பர் 1 தொடர் என்றால் அது இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐ.பி.எல் தொடர்தான். கோடிகள் இலட்சக்கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய இலாபகரமான விளையாட்டு தொடர்!

ஐ.பி.எல் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குப் பல வழிகளில் வருமானம் வருகிறது. அணிகளை விற்றது மூலமாக ஒரு பெரிய வருமானத்தை எடுத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானத்திற்கு மேலும் சில வழிகள் இருக்கின்றன.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்கள் மூலம் ஒரு வருமானம் வந்தாலும், ஒளிபரப்பு உரிமையை தொலைக்காட்சிக்கு விற்பதால்தான் பெரிய தொகை வருகிறது. ஐ.பி.எல் ஆரம்பித்த 2008ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை பத்து வருடம் வரை, ஒளிபரப்பு உரிமையை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 8,207 கோடி கொடுத்து எடுத்திருந்தது.

இதற்கடுத்துக் களத்தில் குதித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டி வரையில் ஐந்தாண்டு டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஆண்டுக்கு 3550 கோடி கொடுத்து வாங்கியிருந்தது.

இந்த நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பு ஏலம் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதில் தற்போது டிவி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும், ஆன்லைன் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் கடைசிநேர செய்திகள் வருகின்றன. சோனி நிறுவனம் வாங்கிருப்பதாகச் செய்திகள் வந்த நிலையில் இந்தச் செய்தி திருப்பமாக அமைந்துள்ளது!