இந்திய அணியில் கடைசி நேர மாற்றம். முக்கிய வீரர் அணியில் இடம்பெற்றார்!- பிசிசிஐ அறிவிப்பு!

0
1678

இலங்கை அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆட இருக்கிறதையடுத்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது.

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான  அணியானது  கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர், இந்திய அணியில் இடம் பெறவில்லை.பும்ரா தனது காயம் குணமான நிலையில்  தன்னுடைய உடல் தகுதியை நிரூபிப்பதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இவர் போட்டிகளில் ஆடுவதற்கான முழு உடல் தகுதியை அடைந்ததையடுத்து  இலங்கை அணியுடன் நடைபெற உள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும்  பங்கேற்கவில்லை. அக்டோபர் மாதம் நடைபெற்ற  டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த பும்ரா கடந்த மாதம் இறுதியில் காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து தனது பயிற்சிகளை தொடங்கினார்.

இதனை அடுத்து பெங்களூரில்
உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். தனது உடற்தகுதியை முழுமையாக நிரூபித்ததன் காரணமாக தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில்  இந்தியா தேர்வு குழு  அவரை தேர்வு செய்துள்ளது.

இந்த வருடம் இறுதியில் உலக கோப்பை நடப்பதால் இனிவரும் எல்லா போட்டிகளிலும் இந்திய அணியானது, உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இருபது வீரர்களைக் கொண்டே விளையாடும். இந்திய அணியின் நம்பர் ஒன் பவுலர் ஆன  பும்ரா அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது இந்திய அணியின் பந்துவீச்சை பலப்படுத்துவதாகும்.