நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காயத்தால் திடீரென விலகல் ; தமிழக வீரர் சேர்ப்பு ; வெளியானது அறிவிப்பு!

0
8030
ICT

3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது!

இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 கைப்பற்றியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது.

- Advertisement -

மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இளம் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், டி-20 உலகக்கோப்பைக்கு ஸ்டாண்ட் பை வீரராக அறிவிக்கப்பட்ட தீபக் சஹரும் இடம் பெற்று இருந்தார். ஆனால் இவருக்கு தென்ஆப்பிரிக்க அணியுடனான முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகு வெளிவந்த செய்திகளில் இவர் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த காயம் கவலைப்படக் கூடிய அளவில் இல்லை என்றும் சில நாட்கள் ஓய்வில் சரியாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில் இருந்து தீபக் சகர் வெளியேறி இருக்கிறார். மேற்கொண்டு இவர் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியோடு இணைவாரா என்பது குறித்து தெரியவில்லை.

இவரின் காயம் குறித்து தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், இந்திய அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பினால் தாராளமாக தீபக் சகரை ஆஸ்திரேலியா அழைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளுக்கு தீபக் சஹருக்குப் பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். திறமை இருந்தும் அணியில் இவருக்கான இடம் இருந்தும், இவரும் தீபக் சஹர் போல அடிக்கடி காயத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தார். தற்பொழுது இவருக்கு மீண்டும் தீபக் சஹரால் இந்திய அணியில் வாய்ப்பு அமைந்திருக்கிறது!