ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட விளையாட முடியாமல் போன 6 முக்கிய வெளிநாட்டு வீரர்கள்

0
223
Joe Root and Stuart Broad

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். அந்த தொடர் இந்திய அணிக்கு பல்வேறு இளம் வீரர்களை தந்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்திய அணி வீரர்களை போலவே ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் எட்டு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

இளம் வீரர்கள் சீனியர் இந்திய வீரர்களிடம் இருந்தும் அதேசமயம் இந்த தொடரில் கலந்துகொள்ளும் சீனியர் வெளிநாட்டு வீரர்கள் இடம் இருந்தும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்வார்கள். குறிப்பாக கிறிஸ் கெயில், கீரன் போலார்டு, ஏபி டிவில்லியர்ஸ், டேவிட் வார்னர், ரஷீத் கான், டுப்லஸ்ஸிஸ் போன்ற சீனியர் வீரர்கள் இந்திய இளம் வீரர்களுக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

- Advertisement -

பல வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் லீக் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருவார்கள். இருப்பினும் ஒரு சில முக்கிய வெளிநாட்டு வீரர்களால் ஒரு முறை கூட இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது. அப்படி ஒருமுறை கூட விளையாட முடியாமல் போன சில முக்கிய வெளிநாட்டு வீரர்களை பற்றி பார்ப்போம்

ஸ்டுவர்ட் பிரோடு

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் ஒருவர் ஸ்டுவர்ட் ப்ரோட். இவர் ஒருமுறை இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் தலைமை பொறுப்பை ஏற்றார். இவரை பஞ்சாப் அணி 2011ஆம் ஆண்டு காண்ட்ராக்ட் மூலம் விளையாட வைக்க முயற்சி செய்தது, ஆனால் இவரால் உடனடியாக இந்தியாவிற்கு வர இயலவில்லை.அதனால் ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை இவர் இழந்தார்.

ஒருவேளை பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தால் கண்டிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு தலை சிறந்தவராக இவர் உருமாறி இருந்திருப்பார். ஏனென்றால் மொஹாலி மைதானம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவானது. இவரும் சற்று வேகமாகவும் ஸ்விங் செய்தும் பந்து வீசுவார். ஆனால் இவரால் அதற்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போனது.

- Advertisement -

முஷ்பிக்குர் ரஹிம்

பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இந்தியாவில் பல போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் அவர். பேட்டிங்கில் நன்றாக விளையாடுவதை தாண்டி ஒரு அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவர் ஒருமுறை கூட ஐபிஎல் விளையாடும் அணிகளால் வாங்கப்படவில்லை. அதன் காரணமாக அவரால் தற்பொழுது வரை ஐபிஎல் போட்டியில் விளையாட முடியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

டேனிஷ் ராம்தின்

மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த ராம்தின் அதிரடியான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆவார். இவரது ஆட்டம் சற்று ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஜோஸ் பட்டிலர் போல் இருக்கும். எனினும் இவர் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட பங்கெடுத்தது கிடையாது. இவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே இவர் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து விளையாடியது கிடையாது.

தினேஷ் சந்திமால்

இலங்கையைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேன் தினேஷ் சந்திமால். 2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்கி தனது அணியில் சேர்த்துக் கொண்டது. ஆனால் இவரது கெட்ட நேரம் இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அதற்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இவராகவே வெளியேறி கொண்டார். அதன் பின்னர் தற்பொழுது வரை இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ ரூட்

இங்கிலாந்தைச் சேர்ந்த வருங்கால நம்பிக்கை பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆவார். இங்கிலாந்து அணியின் சமீபகால பல வெற்றிகளின் இவரது பங்கு நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் இருக்கும். குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக மிக சிறப்பாக அனைத்து போட்டிகளிலும் விளையாடி வெற்றிக்கு ஒரு காரணமாக இவர் இருந்தார் என்பது மிகையாகாது. 2014ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மிக அற்புதமாக விளையாடி அனைத்து அணிகளையும் அசத்தினார்.

இருப்பினும் எந்த அணியும் இவரை வாங்க முன்வரவில்லை. 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி தங்களது அணிக்கு ஒரு கேப்டன் தேவை எனவும் கண்டிப்பாக இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்டை வாங்கி தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க உள்ளதாக ஒரு வதந்தி வெளிவந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கே எல் ராகுல் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதற்குப் பின்னர் எந்த அணியில் தற்போது வரை ஜோ ரூட்டை வாங்கவில்லை என்பது தான் சோகமான செய்தி.

வெர்ணன் பிலான்டர்

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பிலாண்டர் பந்துகளை மிக வேகமாக வீசுவார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும். பந்தை வேகமாக பேசுவதைக் காட்டிலும், பந்தை மிக அழகாக சுவிங் செய்வார். தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியை தாண்டி உலக அளவில் நடக்கும் டி20 போட்டிகளில் இவர் பங்கு எடுத்து இருக்கிறார். ஆனால் இவரால் ஐபிஎல் தொடரில் பங்கு எடுத்துக் கொண்டு விளையாட முடியவில்லை.